View Single Post
  #26  
Old 28-02-09, 05:35 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
ஒரு முறை நான் என் நண்பன் வீட்டிற்கு சென்றிந்தேன். அவனாலும் அவனின் குடும்பத்தினராலும் நான் உபசரிக்கப்பட்டேன். அந்த உபசரிப்பு என் வாழ்க்கையில் மறக்க முடியாத உபசரிப்பு. அவன் பள்ளியில் படிக்கும் போதும், கல்லூரியில் படிக்கும் போதும் வாங்கிய பதக்கங்களை என்னிடம் காண்பித்து சந்தோஷம் அடைந்தான் நானும் அதை எல்லாம் கண்டு மிக சந்தேஷம் அடைந்தேன்.

அவனின் வீட்டிற்கு பக்கத்திலேயே கடற்கரை... காலார நடக்கலாம் என்று கடற்கரை பக்கம் சென்றோம்... இதமான காற்று... வங்காலவிரிகுடாவில் இருந்து வந்துகொண்டிருந்தது... அந்த காற்றுப்பற்று அருகில் உள்ள தென்னைமர கீற்றுகள் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தத.... இவையெல்லாம் ரசித்து ரசித்து நேரம் போனதே தெரியவில்லை... அந்தி சாயும் நேரம் ஆகிவிட்டதால்.. மீண்டும் எங்கள் நடை வீட்டை நோக்கி பயணமாகின. அவனிடம் பிரியாவிடை பெற்று என் வீட்டிற்கு வரும் வழியில்... அங்கே என்னோடு வேலை பார்க்கும் நண்பனையும் பார்க்க நேர்ந்தது. அவனோடு சில நிமிடங்கள் பேசிவிட்டு... காற்றாட அந்தி பொழுதை ரசித்த படி... அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு என் வீடு வந்து சேர்ந்தேன்.

இலக்கிய கதைகள் எழுத நேரம் ஆகும் என்பதால், உடனடி உணவை போல் இதை எழுதியுள்ளேன். இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன்.

நன்றி
Reply With Quote