View Single Post
  #1  
Old 10-06-07, 03:21 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,390
My Threads  
புதிய நேரடி தமிழ் தட்டச்சு சோதனை.

நண்பர்களே..!!

இங்கே என்னையும் சேர்த்து பலர் இகலப்பை கொண்டு தட்டச்சு செய்து பதிக்கிறார்கள். இகலப்பையை உபயோகிக்க முடியாதவர்கள், நமது தளத்தின் கீழ் பகுதியில் உள்ள "யூனிகோட் கன்வர்ட்டர்" கொண்டு தட்டச்சு செய்து பதிக்கிறார்கள்.

இந்த இரண்டையும் உபயோகிக்க முடியாமல் இன்னும் பலர் உலாவிக் கொண்டு தான் இருக்கிறார்கள். வரும் ஆகஸ்டு மாதம் முதல் மீண்டும் புதியவர்களுக்கு நமது தளத்தை திறக்க இருக்கிறோம், அப்போது இன்னும் பலர் தமிழில் எழுத தவிப்பார்கள். அவர்களுக்காக தமிழில் தட்டச்சு செய்வதை இன்னும் எளியதாக்குகிறோம். இனி எந்த வித மென்பொருளும் இன்றி நமது தளத்தில் நேரடியாகவே தமிழில் பதிக்கும் முறை இன்று முதல் சோதனையோட்டமாக செயல் படுத்தப் படுகிறது.

இதை நீங்கள் திரி துவக்கும் போதும், பதிலளிக்கும் போதும், "க்விக் ரிப்ளே" செய்யும் போதும் நீங்கள் தட்டச்சு செய்யும் இடத்தின் மேல் "Phonetic, Bamini, English" என மூன்று பட்டன்கள் தோன்றும். இதில் பாமினியை நானே வடிவமைத்துள்ளேன், ஆனால் இதற்கு முன் பாமினி எழுத்துருவை நான் உபயோகித்ததே கிடையாது. அதனால், பிழைகள் வர வாய்ப்புள்ளது. பாமினி எழுத்துருவில் தட்டச்சு செய்து பழக்கமுள்ளவர்கள், அதிலுள்ள நிறை குறைகளை சுட்டிக் காட்டினால் திருத்த எளிதாக இருக்கும்.

இந்த வசதி தமிழ் மென்பொருள் இல்லாத புதிய இடங்களில் இருந்து அவசரமாக நமது தளம் வருபவர்கள், "சைபர் கபே" போன்ற பொது இடங்களில் இருந்து வருபவர்கள், குறிப்பாக விடுமுறையில் இருக்கும் போது நமது தளம் வருபவர்களுக்கும் மிக உதவியாக இருக்குமென்று நம்புகிறேன். மேலும் விண்டோஸ்98, விண்டோஸ்Me, Linux, Mac வைத்திருப்பவர்களாலும் இனி இதில் சிறந்த முறையில் தட்டச்சு செய்ய முடியும்.

கடைசியாக இதில் ஒரு குறைபாடும் உள்ளது, அதையும் கூறிவிடுகிறேன். இது Message என்னும் தகவல்கள் தட்டச்சு செய்யும் இடத்தில் மட்டுமே வேலை செய்யும், குறிப்பாக திரியின் தலைப்பு கொடுக்கும் Subject/Title பகுதியில் இந்த வசதி வேலை செய்யாது. அதனால், தலைப்பையும் Message பெட்டியுனுள்ளேயே முதலில் தட்டச்சு செய்து விட்டு, பிறகு நகலெடுத்து தலைப்பில் பதிக்கவும்.

இந்த முயற்சி வெற்றிகரமாக முடிந்தால் இந்த வசதி ஆகஸ்டு மாதம் முதல் நிரந்தரமாக்கப் படும், அல்லது பிரச்சனைகள் வந்தால், ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு தொடராது.

உங்கள் ஆதரவிற்கு நன்றி.!!

(சோதனைக்காக இதையும் இகலப்பை மென்பொருள் இல்லாமலேயே புதிய வசதியில் தட்டச்சு செய்துள்ளேன். தற்போது InternetExplorer 6 & 7உலாவிகளில் மட்டுமே சோதித்துள்ளேன், மற்ற உலாவிகளில் நீங்கள் முயற்சித்துப் பார்த்து கூறவும். )

=================================================================
கூறப் பட்ட குறைகள் பின்வருமாறு, அவற்றை களை முயற்சிக்கிறோம்.

Bugs Reported So Far:

1) Hyphen (minus sign) not working.

Solved: Fixed Now.

2) Extra star (asterik) signs appears in blank spaces or wherever the character ends with 'a'.

3) While pressing Enter, Scrollbar Not moving down

4) Parts of the English Characters gets changed as Tamil while replying.

Temp. Solution: Before typing, change the selection to English Keyboard, and press Enter or space, then start typing by pressing Phonetic.

5) While Replying using QUOTE, not possible to type at the beginning.

Temp. Solution: Please reply at the bottom of Quote Message.

6) In Private Massaging, While reply using Quote, not possible to type at the beginning. Also while pressing Enter at the beginning, it brings the whole tool bar brings down.

Temp. Solution: Please reply at the bottom of Quote Message.

7) Shortcut Key for switching English to Tamil.

Answer: Currently due to technical issues, it is not possible, but trying to sort out the issue and introduce shortcut keys.

8] In Bamini Keyboard, 'H' stands for 'ர்', it is not printing properly.

Solved: Fixed Now.

9) In Bamini Keyboard, Tamil Vowels e, ee, ai ('ெ ே ை') problem with Consonents.

Answer: Type the Consonant first 'க'*, then type the Vowel 'ெ ே ை'.

.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 24-03-08 at 02:08 PM.