View Single Post
  #1  
Old 27-03-20, 01:21 PM
தமிழ் பையன் தமிழ் பையன் is offline
User inactive for long time
 
Join Date: 18 Jan 2020
Posts: 0
My Threads  
ஒரு இரங்கல் செய்தி: டாக்டர் சேதுராமன்

நடிகரும், தோள் மருத்துவருமான டாக்டர் சேதுராமன் நேற்று மாரடைப்பின் காரணமாக காலமானார். அவருடைய வயது வெறும் 36 தான். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட கொரோனா வைரஸை பற்றி அவர் பதிவிட்ட விழிப்புணர்வு விடியோவை பார்த்தேன். அவர் மிகவும் நல்ல மனிதர். அன்பானவர், அழகானவர். இந்த
சிறு வயதிலே அவருக்கு இப்படி ஆகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உடல் ஆரோகியதில் அதிக கவனம் செலுத்தும் ஒரு நல்ல மருத்துவருக்கே இந்த நிலைமை என்றபோது; வாழ்க்கையை பற்றிய பயம் இன்னும் அதிகரிக்கிறது. யாருக்கு எப்போது என்ன ஆகும் என்றே கணிக்க முடியவில்லை. மேலும் அவருக்கு ஒரு பெண் குழந்தை வேறு உள்ளது. அவர் சினிமாவில் வேண்டுமானால் பெரிதாக சாதிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் எத்தனையோ பேரின் அன்பை சம்பாதித்தவர். அவர் "கண்ணா லட்டு தின்ன ஆசையா" என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிட தக்கது. அவரின் மனைவி,குழந்தைகள், உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
Reply With Quote