View Single Post
  #1  
Old 31-12-23, 11:53 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,307
iCash Credits: 677,602
My Threads  
நண்பர்களுக்கு புத்தாண்டு பரிசு

தளத்து நண்பர்களே,

வரும் ஜனவரி 14 முதல் பெப்ரவரி 14 வரை நம் தளத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்த இருக்கிறோம், அதற்கு முன்னதாகவே அந்த நாட்களில் சேரும் உறுப்பினர்கள் சம்பந்தமான வேலைப்பளுவை குறைக்க முன் கூட்டியே முன்னாள் உறுப்பினர்களை அனுமதிக்க சென்ற மாதம் ஒரு வாய்ப்பு தந்தோம். இப்போது இன்னொரு வகையில் புது உறுப்பினர்களை இன்றிலிருந்து (ஜனவரி 1 முதல் ஜனவரி 10 வரை ) 10 நாட்கள் மட்டும் தளத்தில் முன்கூட்டியே சேர்க்க நினைக்கிறோம். இங்கு ஏற்கெனவே உள்ள ஒரு வருடத்திற்கு மேல் உறுப்பினராக இருக்கும் குறைந்தபட்சம் காமக்கதை வாசல் அனுமதி உள்ளவர்களும் கட்டண உறுப்பினராக இருக்கும் அன்பர்களும் உங்கள் நண்பர் ஒருவரை சேர்க்க நினைத்தால் தளத்து இமெயிலில் அல்லது தனிமடலில் என்னிடம் கீழே உள்ள விவரங்களை தெரிவித்து உங்கள் நண்பரை இங்கே சேர்த்துக்கொள்ளலாம்.

1) சேர்க்க விரும்பும் உறுப்பினரின் ஆக்டிவான/இங்கே ரெஜிஸ்டர் செய்ய வேண்டிய இமெயில்

2)அவரை நீங்கள் எவ்வளவு காலம் அறிந்திருக்கிறீர்கள்

இதற்கு முன் இம்மாதிரி ஒரு புதிய உறுப்பினரை சேர்க்கும் வசதி இருந்தது, ஆனால் அப்படி சேர்க்கும் உறுப்பினர் நடவடிக்கைகளுக்கு இங்கே பரிந்துரைப்பவர் பொறுப்பேற்க வேண்டும் என்று ஒரு விதிமுறை சொல்லப்பட்டது. இப்போது அது இல்லை.

இனைய உலகில் நண்பர்களாக பிற சமூக அல்லது பாரங்களில் நண்பர்களாக இருப்பவர்கள் உண்மையிலே எப்படிப்பட்டவர்கள் என்று யாரும் உறுதியாக அறுதியிட்டு சொல்ல இயலாது, மேலும் அவர்கள் சேரும் இடம் காம தளம் என்பதால் இங்கே நாம் பதிந்தது, இனி பதிக்க இருப்பதை வைத்து அவர் நம்மை எடை போடக்கூடும், ஒருவேளை அவர் பின்னாளில் இங்கே ஏதாவது கடுமையான விதிமுறைகளை மீறினால் அது நம்மையும் பாதிக்கும் என்பதால் அநேகர் இம்மாதிரி சேர்க்க விருப்பப்படவில்லை. கடந்த ஆண்டில் ஒரே ஒருவர் தைரியமாக அவர் நண்பரே சேர்த்தார். ஆனால் அவர் அப்படி ஒன்றும் பெரிதாக இங்கே அடிப்படை பதிவுகள் கூட குறிப்பிட்ட காலத்தில் பதிவுகள் செய்யாமல் கணக்கை இழந்து விட்டார்.

ஏன், இம்மாதிரி முன்கூட்டியே அனுமதிகள் தர நிர்வாக குழு விரும்புகிறது என்றால் புது உறுப்பினர் சேர்க்கை அனுமதிக்க ஆரம்பித்த நள்ளிரவு 12 மனியில் இருந்து சில மனி நேரங்களில் அதிகாலைக்குள் 20 பேராவது காத்திருப்பவர்கள் சேர்ந்து அடுத்தடுத்து ஆர்வத்தில் இமெயில் தந்து கொண்டே இருக்கிறார்கள். இப்படி முன்னர் சேர்ந்தவர் விவரம் மற்றும் சேர்ந்தவர் கணக்கை ஆக்டிவேட் செய்ய கேள்வி பதில் கேட்டுப்பெறுவதற்குள் பொறுமை இல்லாமல் இன்னொரு கணக்கை இன்னொரு இமெயில் மூலம் துவங்கி பின் இரட்டை கணக்கு விதிமுறையில் மாட்டிக்கொள்கிறார்கள். முடிந்தவரை ஆரம்பத்தில் நாங்கள் உடனே எதிர்வினை ஆற்றுகிறோம், ஆனால் இந்திய நேரப்படி நள்ளிரவில் எல்லாம் உடனே அனைவருக்கும் ஆவண செய்ய இயலாது.

மேலும், பாதுகாப்பு கருதி அலுவலக கணினியில் தான் உறுப்பினர் கணக்கு விரைவாகவும் முன்னரே இங்கே உள்ள தகவல்களை வைத்து சேரும் உறுப்பினரை சரி பார்த்தும் நடைமுறைப்படுத்த முடியும், என்பதால் முடிந்தவரை வேலைப்பளு குறைக்க நினைக்கிறோம்.


இம்மாதிரி புது உறுப்பினர்களை பரிந்துரைப்பவர்கள், பொதுவில் வேறு பாரங்கள் அல்லது ப்ளாக்குகளில் தெரிவிக்காமல் தனிப்பட்டு உங்கள் நண்பர்களிடம் தெரிவித்து இங்கே அவர் இசைவு பெற்ற பின் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

நண்பரை இங்கே சேர்ப்பவர் நம் விதிமுறைகளை முடிந்தவரை சுருக்கமாக சொல்லி விடுவது நல்லது, மற்ற ப்ளாக்குகள் போல பாரங்கள் போல எடுத்தவுடன் அனைத்தும் படிக்க இயலாது என்பதனையும், நகலெடுத்து வெளியேயும், உள்ளேயும் ஒட்டி பதிக்க இயலாது என்பதனையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது அவசியம்.

இப்படி புதிதாக சேர்க்க நினைக்கும் புது உறுப்பினர், முன்னரே இங்கே உறுப்பினராக இருந்தாலோ அல்லது பின்னர் சேர்ந்த பின் அவர் தவறான தகவல் தந்து இனைந்திருப்பது, அல்லது இங்கே உள்ள விதிமுறை ஏதாவது ஒன்றை மீறினால் அவர் கணக்கு மட்டும் முடக்கப்படும், ஒரு நடைமுறைக்கு அவரை இங்கே சேர்த்தவருக்கு ஒரே ஒரு தகவல் மட்டும் தரப்படும், இங்கே சேர்ந்தவர் தவறான செயல்களுக்கு ஒருபோதும் அறிமுகப்படுத்தியவர் பொறுப்பேற்க தேவையில்லை, அவர் நல்ல எண்ணத்தில் தான் அதனை செய்திருக்கிறார் என்றே எடுத்துக்கொள்வோம்.

இவ்வாறு பரிந்துரைப்பவர் இமெயில் கிடைத்தவுடன் தளத்தில் இருந்து இந்த வருடம் சேர்க்கைக்காக ஒரு தனிப்பட்ட இமெயில் கேஎல்2024டீம்@ஜிமெயில் என்றதில் இருந்து ஒரு தகவல் மூலம் அவரை தொடர்பு கொண்டு விரும்பும் பயனாளர் பெயர், பிறந்த தேதி, அவர் வசிக்கும் நாடு(நேர அளவிற்காக) மற்றும் பாலினம் கேட்டுப்பெறப்படும். அவரை தொடர்பு கொள்ளும் இமெயிலே பின்னர் அவர் ரிஜிஸ்டர்ட் இமெயிலாக இங்கே எடுத்துக்கொள்ளப்படும், எனவே சரியான இமெயில் தர வேண்டியது அவசியம். கணக்கு துவங்கிய பின் ஒரு ஜிமெயில் பார்ம் மூலம் அவர் நம் தளத்து விதிமுறைகளை பார்த்துக்கொண்டாரா என்று அறிய 10 கேள்விகள் தோராயமாக கேட்டு அதில் 8 சரியாக இருந்தால் (80 மதிப்பெண்) பெற்றிருந்தால் அனுமதிக்கப்படுவார்.

அப்படி அவர் சேர்ந்த பின் ஒரு புது உறுப்பினரை இங்கே அறிமுகப்படுத்தியதற்காக இங்கே பரிந்துரைத்த நண்பருக்கு ஒரே ஒருமுறை மட்டும் முதலில் சேர்த்தற்கு பரிசாக பின் 1000 இபணம் சன்மானமாக வழங்கப்படும்.
__________________

Last edited by asho; 01-01-24 at 04:52 AM.