View Single Post
  #11  
Old 04-03-22, 09:31 PM
பிரசாந்த்'s Avatar
பிரசாந்த் பிரசாந்த் is offline
Gold Member (i)
 
Join Date: 08 Sep 2010
Posts: 2,212
iCash Credits: 48,182
My Threads  
21-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது காமலோகத்திற்கு வாழ்த்துக்கள். தமிழர்களோடு காமம் பகிர்ந்து கொள்ள அமைக்கப் பட்ட அழகான மேடை இது. திரும்பிப் பார்க்கையில் வியப்பாகவே இருக்கிறது.

இதை ஒரு தவமுயற்சியாக எடுத்து இன்று வரை இத்தனை உள்ளங்களை இணைத்து அவரவரின் உள் மனதில் தேங்கிக் கிடக்கும் காம உணர்ச்சிகளுக்கு வடிகாலாக கொடுத்து வரும் தலைவர் அவர்களுக்கும், அன்று முதல் இன்று வரை அவருக்கு துணை நின்று உதவிகள் செய்து வரும் நண்பர்களுக்கும், இன்றும் தோளில் தூக்கி வைத்து இரவு பகல் பாராமல் இயக்கிக் கொண்டிருக்கும் மேற்பார்வையாளர், கண்காணிப்பாளர் மற்றும் நிர்வாக நண்பர்களுக்கும் மிக்க நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்!

மூத்த உறுப்பினர்களுக்கு அளித்துள்ள சலுகைகள் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றால் மிகையாகது. அதே போல் தண்டனை பெற்றவர்களுக்கும் இது ஒரு மறுவாழ்வாக அமையவும் உள்ளது. பங்களிக்க முடியாத ஆனால் அதே சமயம் இந்தக் காமலோகத் துடிப்பிலே சேர்ந்திசைக்க வேண்டும் என்ற நண்பர்களுக்கும் கட்டணச் சலுகை கிடைத்துள்ளது. மொத்ததில் இவையெல்லாம் காமலோகத்தை இன்னும் சிறப்புறச் செய்யும் என்பதில் சந்தோஷமே, அதற்கும் காமலோக நண்பர்கள் சார்பாக நன்றி!
Reply With Quote