அடுத்தடுத்த பதிவுகள்
மற்றவர் திரியிலே பதிக்கும் முன் ஒருவர் தானே அடுத்தடுத்து ஒரே திரியில் பதிந்து வைப்பது பற்றிய விளக்கம்.
நம் தளத்திலே கருத்துக்கள்(பதிப்புகள்) எண்ணிக்கை அடிப்படையிலே அனுமதிகள் வழங்கப்படுவதால், உறுப்பினர் எவரேனும் தத்தம் பதிப்புகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஒரே திரியில் மற்றவர் பதிக்கும் முன் தானே அடுத்தடுத்து பதிந்து எண்ணிக்கையை கூட்டி பின் பதிப்புகளின் எண்ணிக்கையை காட்டி அனுமதிகள் கேட்காமலிருக்க ஒருவரே ஒரே திரியில் மற்றவர் பதிக்கும் முன் அடுத்து அடுத்து பதிதல் கூடாது.
அதே போல தான் ஆரம்பித்த திரியை மற்றவர்களை வலிந்து (நியூ போஸ்டில்) காண வைக்கவும் சிலர் மற்றவர் பதிக்காமல் போனாமலும் தானே திரும்ப திரும்ப பதிவிட்டு அதனை விளம்பரப்படுத்துவதும் தவறு.
பொதுவாக சிலர் செய்யும் அடுத்தடுத்த பதிப்புகள்.
தனது திரியில் பிறர் பதிந்த கருத்துகளுக்கு பதில்/நன்றி தெரிவிக்க ஒவ்வொருத்தர் பதிவிற்கும் தனித்தனி பதில் அடுத்தடுத்து பதிப்பது. இதற்கு மல்டி கோட் செய்தால் போதும்.
தான் ஆரம்பித்த திரியிலே பதிவுகளை அடுத்தடுத்து பதிந்து தருவது. ஒரே நாளில் பதிவது தவறு, மற்றபடி அடுத்தடுத்த நாட்கள் பதிவது தவறில்லை, ஆனால் அம்மாதிரி பதிபவர் தனது முந்தைய பதிவுகளுக்கு பதில் இல்லை என்பதை அறிந்து, அதற்கு வரவேற்பில்லை என்பதனை உணர்ந்து அடுத்தடுத்து பதிக்க வேண்டுமா என்று யோசித்து பின் பதிவது நல்லது.
__________________
|