View Single Post
  #51  
Old 26-08-07, 08:36 PM
Ragov Ragov is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: சிங்கப்பூர்
Posts: 949
My Threads  
அரசன் அவர்களுக்கு மிக்க நன்றி,

உங்கள் சேவை என்னைப்போன்ற புதியவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்பதில் எள்ளலவும் ஐயமில்லை!
இருப்பினும் நான் இங்கு ஒரு மாற்று கருத்தை முன் வைக்க விரும்புகிறேன். நாம் இப்படி ஆங்கில எழுத்து மற்றும் உச்சரிப்பின் மூலமாக தமிழை பயிற்சி செய்து நடைமுறை படுத்தினால், பிற்காலத்தில் என்னவாகும் என்று சற்று யோசிப்போமானல்....

பல ஆண்டுகளுக்கு பிறகு, அனைவரும் தமிழில் தங்குதடையின்றி தட்டச்சு செய்யும் காலத்தில், நம் வருங்கால வாரிசுகள் ஆய்வு செய்து, தமிழ் மொழியானது ஆங்கிலம் சார்ந்தே வளர்ந்துள்ளது என்று தீர்மானித்து, ஆங்கிலம் தமிழைக்காட்டிலும் முன்னோடியான மொழி என்றாகிவிடும்.

ஆயினும் இன்றய காலகட்டத்தில் நம்மில் பெரும்பாலோர் தமிழுக்கு முன் ஆங்கிலத்திலேயே தேற்சி பெற்றவர்கள் அதனால் ஆங்கிலத்தை ஊன்றுகோலாக்கி தமிழில் தட்டச்சு செய்ய முயலுகிறோம். உடனடியாக/வேகமாக தமிழ் தட்டச்சு செய்ய இவ்வழி பின்பற்றுவதில் தவறொன்றுமில்லை! என்றே நான் கருதுகிறேன்.

முடிவுரை யோசனையக நான் சொல்ல விரும்புவது, தமிழை அதன் தனித்துவத்துடன் வளர ஆவனங்கள் செய்ய வேண்டும். உடனடித்தேவைக்கு இந்த குறுக்கு வழியை மேற்கொன்டாலும், விரைவில் நிரந்தரமாக தமிழ் விசைப்பலகை வாயிலாக தமிழ் தட்டச்சு செய்ய ஒவ்வொருவரும் உறுதியுடன் ஆவனங்கள் மேற்கொள்ள வேண்டும்.

இதைப்பற்றி உங்கள் அனைவரின் கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் ஆரோக்யமான கலந்துறையாடலையும் வவேற்கிறேன்!

பண்புடன்
ராகவ்

Last edited by Ragov; 26-08-07 at 08:39 PM. Reason: பிழைகள்
Reply With Quote