View Single Post
  #1  
Old 18-08-14, 10:30 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,292
iCash Credits: 675,646
My Threads  
நி: 0099 - குண்டு மாங்கா! - சவால் போட்டி முடிவுகள்

நி.சவால்: 0099 - குண்டு மாங்கா! - சவால் போட்டி முடிவுகள்.


நண்பர்களே..! நண்பிகளே...!

'நிர்வாக சவால்: 0099' சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான rajjdy அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான 'குண்டு மாங்கா!' - 1, 2' என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு: இங்கே


இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 3 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டனர். அதில் kamakodangi68 தவிர, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்த Nallavan1010 & subbu2000 ஆகிய இருவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 39 பேர்கள் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!

இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 20 வாக்குகள் பெற்று subbu2000 முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0099 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான subbu2000 அவர்களுக்கு நி.சவால்: 0099 போட்டிக்கான சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் முதன் முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெள்ளிவாசல் மெம்பரான இவர் இப்போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் அடுத்த வாசலான தங்கவாசலுக்கு அனுமதி பெறுகிறார். வாழ்த்துகள் subbu2000.

இந்த முறை இரண்டாம் இடத்தை Nallavan1010 பெற்றுள்ளார். முதல் பரிசை ஒரு வாக்கில் நெருங்கியதற்கு உற்சாக பரிசாக இவர் 'ஆறுதல் பதக்கம்' மற்றும் 2000 இ.பணம் பெறுகிறார். தனது சிறப்பான தொடர்ச்சியால் இவர், வெற்றி பெற்ற subbu2000 -க்கு சரியான போட்டியை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

1) subbu2000 - 20 வாக்குகள்

2) Nallavan1010 - 19 வாக்குகள்


இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள்.

-:O:-
__________________
Reply With Quote