View Single Post
  #11  
Old 07-08-15, 04:30 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
Quote:
Originally Posted by mayakrishnan View Post
ஒரு வருடம் கழித்து தான் வருகிறோம் என தெரிந்து தான் அந்தப் பதிவினை எழுதினேன். நான் தேடிய போது அமெசானில் கிண்டில் வெர்சன் தமிழ் புத்தகங்கள் எதுவும் பார்த்த மாதிரி நினைவில்லை. நல்ல புத்தகமாக இருந்தால் நாங்களும் காசு கொடுத்து வாங்க ரெடி தான்
சென்ற வருடம் நண்பர் போத்தன் ராஜா கேள்வி எழுப்பியபொழுது இருந்த பிரச்சினை தற்பொழுது அவ்வளவாக இல்லை. அமேசானின் இந்திய தளத்தில் தமிழ் இபுக் கிண்டில் வர்ஷன் என்று போட்டால் நிறைய வந்து கொட்டும்.

Quote:
Originally Posted by mayakrishnan View Post
அந்த மாதிரி அடிப்படை அறிவு கூட இல்லாதவன் அல்ல நான். நான் தேடும் புத்தகமெல்லாம் இலவசமாக வேண்டும் என்றே சொல்லவில்லை.
ஸாரி நண்பா! நான் கூறியதை ஏதோ தவறாக புரிந்துக்கொண்டீர்கள் என்று எண்ணுகிறேன். இலவசமாக புத்தகம் கிடைக்கும் தளத்தில் நாம் தேடும் புத்தகம் கிடைக்காது என்றேன். இலவசமாக புத்தகங்களை தேடுபவர்களை தவறாக கூறவில்லை. வேறோரு திரியில் சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூ நாவலின் இபுத்தகத்தின் பிடிஎஃப் வடிவம் வேறு யாரிடமாவது இருந்தால் தாருங்கள் என்று நானும் கேட்டிருக்கிறேன்.

Quote:
Originally Posted by mayakrishnan View Post
நானும் இதனை முன்பே காலிபர் மூலம் செய்து பார்த்து 'கையை வளைத்து மூக்கைத் தொடுவதில்' சலித்து தான் பின்னூட்டத்தினை எழுதினேன்
இந்த திரியின் சொந்தக்காரர் போத்தன் ராஜா கூறியது போல் ஆரம்பத்தில் அதில் சிரமம் இருந்தது. எப்படி மாற்றினாலும் தமிழ் எழுத்துருவில் குளறுபடி இருந்தது. இப்பொழுது அந்த பிரச்சினை இல்லை.

Quote:
Originally Posted by mayakrishnan View Post
நான் கேட்பது என்னவென்றால் இத்தனை விளம்பரங்கள் தமிழகத்தில் செய்யும் ஒரு நிறுவனம் தமிழில் புத்தகங்களைப் படிப்பதை எளிதாக்கியிருக்க வேண்டுமா? வேண்டாமா?
தங்களின் ஆதங்கம் புரிகிறது. கிண்டில் ஆரம்பித்த பொழுது அதற்கான ஆங்கில புத்தங்கள் உடனே கிடைத்தன. கிண்டிலை அவர்கள் மார்க்கெட்டில் விட்டதே கிண்டில் வர்ஷனில் புத்தங்களை விற்பதற்காகத்தான். இந்தியாவில் இவர்களின் ஆரம்பகால டார்கெட் ஆங்கிலம் படித்தவர்கள் மட்டுமே. பிறகு வர்த்தகத்தினை விரிவுப்படுத்த மற்ற மொழிப்புத்தங்களையும் கிண்டில் வர்ஷனில் விற்க ஆரம்பித்தனர். தமிழை விட ஹிந்தியில் கிண்டில் வர்ஷன் புத்தகங்களை ஏராளமாக விற்கின்றனர். காரணம் ஹிந்தி மார்கெட் தமிழை விட அதிகம். விரைவில் தமிழ்ப்புத்தங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம். எவ்வளவு அதிகமானாலும் கிண்டிலை அதிகம் உபயோகிப்பவர்கள் ஆங்கில புத்தக விரும்பிகளே! பிடிஎஃப் வர்ஷனை நேரடியாக கிண்டிலில் படிக்கும் வசதியை அவர்கள் செய்ய மாட்டார்கள். அப்படி செய்தால் பிறகு கிண்டில் வர்ஷன் புத்தகங்களில் கிடைக்கும் வருவாய் நின்றுவிடும்.

இங்கு ஐபேட் வந்த பிறகும் இங்கு கிண்டிலின் பயண்பாடு குறையவில்லை. காரணம் அதன் பேட்டரி லைஃப் மற்றும் இருட்டிலும் ஒளியிலும் சிறப்பாக தோன்றும் எழுத்துரு. மேலும் புத்தகம் படிப்பவர்கள் புத்தகத்திற்கு மாற்றாகவே கிண்டிலை கருதுகின்றனர். ஐபேட் மற்றும் டேப்ளட்டினை நோண்டுபவர்கள் பெரும்பாலும் புத்தக விரும்பிகள் அல்ல.
Reply With Quote