View Single Post
  #8  
Old 14-11-17, 03:31 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
நான் ஏற்கனவே வேறொரு இடத்தில் சொன்னதையே இங்கும் சொல்கிறேன். வாத்தியார் சர்க்கஸ் ஜோக்கர் மாதிரி. எல்லாம் அறிந்தவர். ஆனால் பெரும்பாலோருக்கு அவருடைய ஜோக்கர் முகம் மட்டுமே தெரியும். அவருடைய பல கதைகளில் சமுக அவலங்களை பற்றி அசால்ட்டாக சொல்லிவிட்டு செல்வார்.
நண்பர் மச்சானின் வாசகர் சவால் போட்டியில் வாத்தி எழுதிய ஒரு வரலாற்று சிறுகதையின் வாயிலாகவே வாத்தி எனக்கு அறிமுகம்.

வெவ்வேறு களங்களில் கதை எழுத வாத்தி முயலும் பொழுது சில கதைகள் முகம் சுளிக்கவும் வைத்துள்ளது.

லோகத்தில் குறுஞ்சவால்களின் பெருநில மன்னர் வாத்தி. எத்தனை வித சவால்கள் ! அவருடையை ஒரு குறுஞ்சவாலை அவர் அனுமதியுடன் மீண்டுமொருமுறை நான் நடத்தியுள்ளேன். நான் அறிந்த வரையில் வாத்தி நடத்தும் போட்டியில் அவரே தீர்ப்பளிப்பார். இதுவரை அவருடைய தீர்ப்பினை யாரும் தவறென்று சொன்னதில்லை. காரணம் அவ்வளவு தெளிவாக மற்றும் சரியாக இருக்கும்.

லோகத்தில் எழுத்தாளர்கள் கதை எழுதி சோர்ந்துபோகும் பொழுதெல்லாம், வாத்தியின் குறுஞ்சவால்கள் உற்சாகமூட்ட தவறியதேயில்லை.

ஓல்வாத்தியார் என்ற ஒரு பாத்திரத்தினை உருவாக்கி அதற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை அந்த பாத்திரத்தினை எப்படி வேண்டுமானாலும் கிண்டல் செய்ய்லாம் என்ற வாத்தியின் கொள்கை சற்று வித்தியாசமானதே. லோகத்தில் யாருமே பார்க்காத அல்லது பேசாத ஒரே ஆள் வாத்தியாகத்தான் இருக்கும்.
கதை மட்டுமல்லாமல் பின்னூட்டமிடுவதிலும் வாத்தி வித்தியாசமானவர். சொல்லவேண்டியதை தெளிவாக சொல்லிவிடுவார். பிடித்தால் பாராட்டுவார். பிடிக்கவில்லையென்றால் சுருக்கமாக சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார். நான் எழுதிய ஒரு நிர்வாக சவாலில் வாத்தி எழுதிய பின்னூட்டத்தினை பலமுறை படித்து ரசித்திருக்கிறேன். காரணம் - தன் புகழ்ச்சியை கேட்காத இரு காது பெரும்பாலும் இருக்காது

நண்பர் மதனுடன் வாத்தி பலமுறை வாதிட்டுள்ளார். கோபப்படாமல் வாத்தி வைக்கும் வாதங்களும் ரசிக்கக்கூடியவையே!

வாத்தியை பொறுத்தவரை இந்த பத்தாண்டு ஒரு பெரிய விஷயமே இல்லை. இன்னும் பல ஆண்டுகள் லோகத்தில் வலம் வருவார்.
Reply With Quote