View Single Post
  #48  
Old 15-04-16, 05:44 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,525
iCash Credits: 148,301
My Threads  
காமலோத்தில் மறக்க முடியாத வகையில் பெரிய கதைகள் வித்தியாசமான சிந்தனைகள் கொன்ட கதைகளை படைத்தும், நச்சென்று பின்னூட்டம் மூலமாக அனைவர் மனதையும் கவர்ந்த நன்பர் டிரீமர் காலமாகி விட்டார் என்ற செய்தி மிக மிக* வருத்தமான செய்தி. நான் லோகத்தில் சேர்ந்து 10 வருடம் பக்கம் ஆகிறது, இது தான் லோகத்தில் முதல் மரண செய்தி.

தன்னுடையை மரணம் எப்ப வரும் மிக சிறந்த ஞானிகளே உனர்வார்களாம், நம்ம டிரிமரும் அவ்வாறு உனர்ந்திருந்ததால் தான் சில மாதங்களுக்கு முன்பு,

லோக உறுப்பினர் மரணித்தால்...?


டிரிமர் அண்ணனின் பரிந்துரைபடி தான் நான் ஓல்நீதிமன்றம் என்ற சவால் போட்டியை துவங்கினேன்.

உடல் நலம் குறைந்த பிறகும் வந்து பின்னூட்டங்களை செய்து எங்களை மகிழ்ச்சியில் வைத்திருந்த நபர் டிரிமர். நான் எந்த படைப்பு செய்தாலும் டிரிமர் அண்ணனிடமிருந்து பின்னூட்டம் எப்ப வரும் என்று ஆவலுடன் ஏங்குவேன். நான் துவங்கி ஓல்நீதிமன்ற சவால் போட்டி அறிவிப்பு திரியில் டிரிமர் அண்ணன் அவர்கள் பதித்ததுதான் காமலோகத்தில் அவர் பதித்த கடைசி பதிப்பாகி விட்டதே. அதை அவர் எனக்கு கொடுத்த வரமாகவே நான் ஏற்றுக்கொள்கிறேன்.

டிரிமர் அண்ணனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை லோக நன்பர்களுக்கு தெரிவித்து அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய கடவுளை பிராத்திக்கிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote