View Single Post
  #17  
Old 18-08-20, 09:36 PM
nandabalan's Avatar
nandabalan nandabalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 01 Jun 2004
Location: madurai
Posts: 3,124
iCash Credits: 246,836
My Threads  
Smile

இன்றைக்கும் நான் குறிப்பிட்ட தோழர்களுடன் தொடர்பிலேயே இருக்கிறேன் என்பதை மிகுந்த பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன். என் தொழில் ரீதியாக ஏதாவது சந்தேகம் என்றால் திரு.ராசு அவர்களைத் தான் நான் தொடர்பு கொண்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்கிறேன். அவர் ஒரு நடமாடும் என்சைக்ளோபீடியோ என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் சொன்னால் அவரின் கெஸ்ட் ஹவுஸில் 1 மாதம் தங்கியிருந்தேன். அதே போல் நண்பர் காஞ்சனாதாசன் அவரைப் போல துன்பத்திலும் நகைச்சுவையோடு பேசுவதற்கு ஆளில்லை. எங்க ஊருக்கு பக்கத்து ஊர்க்காரர் என்ற பெருமையும் உண்டு. நண்பர் அசோவோடு சமீபத்தில் 2 மணி நேரம் தொலைபேசியில் உரையாடி அவரின் இரவுச் சாப்பாட்டுக்கு உலை வைத்த பெருமையும் எனக்கு உண்டு.
நண்பர் ஆதி இப்போது தளத்தில் இல்லை என்றாலும் மிக நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். உதவி என்று கேட்டால் இல்லை என்று மறுக்காத குணம் அவருடையது.

நண்பர் காமக்கேடி வீட்டில் உரையாடிக் கொண்டே உண்ட மதிய உணவை இன்றும் மறக்க முடியாது. தொடர்பிலிருந்து விலகிப் போனது நண்பர் பில்லா மட்டும் தான். அவர் என்ன ஆனார் என்று இப்ப வரை தெரியவில்லை.
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
Reply With Quote