View Single Post
  #1  
Old 06-02-22, 12:15 PM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,760
My Threads  
இந்திய இசைக்குயில் மவுனமானது: பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்

இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடிய இசைக்குயில் லதா மங்கேஷ்கர் ( இன்று பிப்-6 ) காலாமானார். கோவிட் பாதிப்பில் இருந்து அவரது உயிர் மும்பை மருத்துவமனையில் பிரிந்தது. அவருக்கு வயது 92.

மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த, பாலிவுட் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்(92). கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். லதா மங்கேஷ்கர், தமிழில் பிரபு நடித்த ‘ஆனந்த்’ என்ற படத்தில் இளையராஜா இசையில், ‘ஆராரோ ஆராரோ’ பாடல் மற்றும் இளையராஜா இசையில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான, ‘சத்யா’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘வளையோசை’பாடல்களை பாடி புகழ் பெற்றவர். இதை தவிர்த்து இவர் ஏராளமான தமிழ் பாடல்களை பாடியவர்.

இவருக்க கடந்த ஜன., 8 ம் தேதி கோவிட் தொற்று உறுதியானது. தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் மூலம் சுவாசித்து வந்தார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக சில நாட்களுக்கு முன்னர் டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் நேற்று அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இன்று காலை 9;30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

இந்தியாவின் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர், பல கோடி ரசிகர்களின் இதயங்களை வென்றிருக்கிறார். இவர் 1929-ம் ஆண்டு, செப்டம்பர் 28-ம் தேதி, மத்திய பிரதேசத்தின் இந்தூரில் பிறந்தார். இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவர் ஒருவராவார். இவரது கலையுலக வாழ்க்கை 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப்பாடல்களை பாடியுள்ள பாடகி லதா மங்கேஷ்கர் (92). இவரது சகோதரி ஆஷா போஸ்லேவும் புகழ்பெற்ற பின்னணி பாடகர். பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

இவரது உயிர் பிரிந்தாலும் இவரது “ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோ” என்று பல பாடல்கள் அனைவரது செவிக்களுக்கு என்றும் இனிமையான தேனாக ரீங்காரம் இட்டு கொண்டே இருக்கும்

அரசு மரியாதையோடு மும்பையில் இவருக்கு அடக்க செய்யப்படும், இவரது இழப்பை இரண்டு நாட்கள் தேசிய தூக்கமாக அனுசரிக்க படும் மேலும் இரண்டு நாட்கள் தேசிய கோடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது

இவரது ஆத்மா சாந்தி அடையட்டும்!

ஓம் ஷாந்தி!

நன்றி - தினமலர், ஆசியா நெட் நியூஸ் தமிழ்
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
Reply With Quote