அட இதை சொல்லவே இல்ல...
நண்பன் லாலேட்டன் பல வாக்கு வித்தியாசத்தில் அடித்து தூள் கிளப்பிவிட்டாரே. அருமை நண்பா மிக மிக அருமை. சென்ற நி.சவாலில் அருமையான தொடர்ச்சியை கொடுத்து ஒரு வாக்கு வித்தியாசத்தில் பறிபோன தங்க கிரீடம் இப்பொழுது அவரையே தேடி வந்துள்ளது.
இந்த முறை நண்பர்களது தொடரை படித்த நான் அதற்கு பின்னூட்டமிடாமலே அவசரமாக படித்துவிட்டு வாக்கினை செலுத்தினேன். அந்த வகையில் நண்பர் லாலேட்டனின் வெற்றிக்கதைக்கும் எனது பின்னூட்டம் கிடைக்காமல் போனது சங்கடமான ஒன்று தான். எப்படியாயினும் அவரது கடின உழைப்பிற்கு பதக்கங்கள் இனி அவரை தேடி வரும் என்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துகள் நண்பா.
போட்டியில் பங்குகொண்டு சிறப்பித்த மற்ற நண்பர்களுக்கும் எனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்.