View Single Post
  #5  
Old 04-08-22, 07:43 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,296
iCash Credits: 676,125
My Threads  
Quote:
Originally Posted by geevan View Post
மீண்டும் எனது பழைய நிலைக்கு அடைய எனது பிழையை மன்னித்து மறுபடியும் நமது தளத்தில் நான் நடமாட என்ன என்ன செய்ய வேண்டுமோ அதெல்லாம் அருமையாக செய்வேன்
இவருக்கு என்ன பதில் சொல்வது?,

மேலே உள்ள இருவர் போலவே, திரும்ப குறிப்பிட்ட வாசல்களுக்கு அனுமதிகள் கேட்கும் திரி தவிர்த்து இங்கே கேட்கிறாரா இல்லை. இனி சிறப்பாக செயல்படுவேன் என்று உறுதி கூறுகிறாரா, அப்படி என்றால் இந்த பிழையான தலைப்பு கொண்ட திரியில் ஏன் அதனை சொல்ல வேண்டும். இவருக்கும் இவர் வரலாற்றை சொல்ல வேண்டுமா?.

மேலே சொன்னதையே எனக்கு தனிமடலில் இட்டும் சொல்லியிருக்கிறார், பின் அதனை ஏன் பொதுவிலேயும் பதிந்து எல்லோரும் அறிய தருகிறார்?.

இவர் ஆர்வத்தை ஏன் கெடுக்க வேண்டும். இவர் யாரென்று அவ(ரவ)ர் தெரிந்து கொள்ளட்டும்.

இவரும் கடந்த 6 மாதமாக எந்த போட்டியிலும் வாக்களிக்கவில்லை. மாதத்திற்கு ஒரு பதிவு மட்டும் பதிந்து கடந்த 3 மாதத்தில் 2 பதிவு மட்டுமே அதுவும் தங்கவாசல் அசைபடத்திற்கு பதிந்து பங்களித்திருக்கிறார்.

பிழையை மண்ணிப்பதென்றால், பின் தண்டனை எதற்கு நண்பர்களே, எல்லோரும் பிடிபட்டவுடன் இனி மேற்கொண்டு இயங்க முடியாது என்று தெரிந்தவுடன், மன்னிக்கவும் என்று மன்னிப்பு கேட்டவுடன் பிடித்தவர் அப்படியே விட்டு சென்று விடனுமா?. சிறு பிழையாக இருந்தால் அப்படி செய்யலாம். ஒரே தவறை அறிந்து தொடர்ந்து செய்து வந்திருந்தால் அதனை எப்படி மன்னிப்பது. மன்னிப்பு என்ற ஒன்று எல்லாவற்றிற்கும் உண்டு என்றால் தண்டனை என்பது எதற்கு?. அந்த மன்னிப்பிற்கும் கணக்கு உண்டா இல்லையா?.

கதைகளுக்கு பின்னூட்டமிட்டு பங்களித்து பலனடையுங்கள் நண்பர்களே. நீங்கள் இதற்கு முன் பங்களித்து தான் பல படிகள் தாண்டி அனுமதி இங்கே பெற்றிருக்கிறீர்கள். இடையே தூங்கி விட்டீர்கள், எழுப்பி விட்டிருக்கிறோம், திரும்ப யாரென்று எல்லோரும் அறிய பங்களிப்பை தாருங்கள்.

அதை விட்டு இந்த மாதிரி திரிகளில் பதிந்து மற்றவர் கவனம் அல்லது நிர்வாகத்தின் இரக்கம் பெற நினைக்காதீர்கள். தள முன்னேற்றத்திற்கான விசயங்களில் இறங்கிய பின் இரக்கம் பார்ப்பதில்லை. ஒரு 20 கதைகளுக்கு சிறந்த கருத்து பதிந்து விட்டு இம்மாதிரி கேட்டிருந்தால் பரிசீலனை செய்திருக்கலாம். தடை நீங்கி வந்தவுடன் இம்மாதிரி தளத்தில் கோரிக்கை தருவது சரியல்ல.


இதற்கு பதில் தரமாலே நிர்வாக உறுப்பினர்கள் சென்றிருக்கலாம், ஆனால் இவர்கள் நிர்வாகத்தின் கருத்து இதுபற்றி என்ன என்று அறிய தொடர்ந்து அடுத்தடுத்த திரி இடங்களில் பதிந்து கொண்டே இருப்பார்கள் என்பதால் பதில் அறிய தரப்படுகிறது.

இன்னும் ஒருவர் வரலாறு அறிந்த பின் இந்த திரியை பூட்டி விடுவது உத்தமம் என்று அறிய தருகிறேன்.
__________________
Reply With Quote