View Single Post
  #1  
Old 17-10-10, 01:49 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Exclamation அலுவலகத்திலிருந்து காமலோகம் பார்க்கும் நண்பர்களுக்கு!

அலுவலகத்திலிருந்து காமலோகம் பார்க்கும் நண்பர்களுக்கு!

வணக்கம் காமலோக நண்பர்களே!

காமலோகம் காமத்தை முதன்மையாகக் கொண்ட தளம் என்பது எல்லாவரும் அறிந்தது. இங்கே எழுத்து சார்ந்த பதிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் கவர்ச்சியான படங்கள் எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. கதைகளின் நடுவில் படங்கள் பதிப்பது, அவதரில் கவர்ச்சியான படங்களை வைத்துக்கொள்வது, சிக்னேச்சரில் கவர்ச்சி படங்கள் வைப்பது இது போன்ற விசயங்கள் பதிப்பவரின் ரசனையைப் பொறுத்து மறுபடும்.

ஒரு புத்தகம் அல்லது நாவலை வாங்கும் போது முதலில் நம்மைக் கவர்ந்து இழுப்பது அதன் அட்டைப் படம். ஒரு விசயத்தை அணைவரின் பார்வையிலும் விழ வைக்க இந்த கவர்ச்சிப் படங்கள் உதவுகின்றன. அதே போல நமது படைப்புகளையும் வாசகர்கள் தேடி வர வைக்க சில சமயங்களில் படங்கள் பதிக்கிறோம். அவதார் / சிக்னேச்சர் அவரவர் ரசனையைப் பொறுத்து மாறுபடும்.

காமத்தை பிரதானமாகக் கொண்ட ஒரு தளத்தில் இது போன்ற விசயங்களை ஆபாசம் என்று யாரும் சொல்ல முடியாது. அப்படி ஆபாசம் என்று நினைப்பவர்கள் காமக் கதைகளை படிப்பதில் மட்டும் ஆபாசம் இல்லை என்று வாதாடவும் முடியாது. இருப்பினும் இங்கே காமம் படிக்க வரும் அனைவரும் தனி அறையில் இருந்து கொண்டு படிப்பதில்லை. பலர் வீடுகளில் படிக்கிறார்கள். பலர் அலுவலகங்களிலிருந்து காமலோகத்தை படிக்கிறார்கள். என்னையும் சேர்த்து.

வெளி நாடுகளில் வேலை செய்யும் இடங்களில் பல தரப்பட்ட மொழி பேசுபவர்கள் இருப்பதால் நாம் காமம் படிக்கிறோமா அல்லது காவியம் படிக்கிறோமா என்பது யாருக்கும் தெரியாது. இதுவே நம்மை பெரும்பாலான நேரங்களில் காமலோகத்தில் உலாவ வைக்க போதுமான வசதியாக இருக்கிறது. ஆனால், நாம் படிக்கும் படைப்புகளில் ஊடே கவர்ச்சியான படங்கள், கவர்ச்சியான அவதார், கவர்ச்சியான சிக்னேச்சர் என்று இருக்கும் போது நாம் என்ன படிக்கிறோம் என்பதை எல்லாருமே தெரிந்துகொள்ள வாய்ப்பாக போய்விடும். இதானால் நமக்கு பல சமயங்களில் வேலைக்கு ஆப்பாக போய்விடவும் வாய்ப்பிருக்கிறது.

இப்படி அலுவலகத்தில் இருக்கும் வெகு சிலருக்காக படங்களே இல்லாமல் வெறும் எழுத்தை மட்டும் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்வதும், பொறுத்தமான படங்களை பார்க்க விரும்பும் மற்ற வாசகர்களை பாதிக்கும் அல்லவா!

அப்படியென்றால் இதற்கு என்ன தான் வழி?

நாம் தளம் இயங்கிக்கொண்டிருக்கும் vBulletin® மென்பொருள் இதற்கு சரியான தீர்வை வைத்திருப்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது தெரிந்திருக்கும் பட்சத்தில் யாரும் படங்கள், அவதார், சிக்னேச்சர் பிரச்சினையைக் கண்டிப்பாக எழுப்ப மாட்டார்கள்.

அப்படி என்ன தான் தீர்வு! சீக்கிரம் சொல்லித் தொலையப்பா! என்று நீங்கள் உறுமுவது கேட்கிறது. சொல்லிடுறேன்.. சொல்லிடுறேன்.

நண்பர்களே!
1. உங்களுடையை User Control Panel பகுதிக்குச் செல்லுங்கள்.

2. அங்கே இடது பக்கம் Your Control Panel என்றொரு பட்டி இருக்கும். அதிலே Settings & Options என்ற துனைப் பகுதியில் Edit Options என்றொரு தலைப்பைக் காணலாம். அதைச் சொடுக்கினால் பல செயல்பாடுகளை வைத்துக்கொள்ளவும் செயலிழக்க வைக்கவும் ஒரு நீண்ட பாரம்(Form) தோன்றும்.

3. அதிலே Thread Display Options என்றொரு பகுதி இருக்கும். அதில் Visible Post Elements என்ற துனைப்பகுதிதான் நமக்கு சரியான தீர்வைத் தரப் போகும் இடம்.

உங்களுக்கு யாருடைய சிக்னேச்சரும் தெரிய வேண்டாமா! Show Signatures என்ற Option-ஐ Disable செய்யுங்கள். அதாவாது டிக் மார்க்கை எடுத்து விடுங்கள்.

உங்களுக்கு யாருடைய அவதாரும் தெரிய வேண்டாமா! Show Avatars என்ற Option-ஐ Disable செய்யுங்கள். அதாவாது டிக் மார்க்கை எடுத்து விடுங்கள்.

உங்களுக்கு படங்களே தெரிய வேண்டாமா! Show Images (including attached images and images in [IMG] code) என்ற Option-ஐ Disable செய்யுங்கள். அதாவாது டிக் மார்க்கை எடுத்து விடுங்கள். (இதனால் படமே பார்க்க முடியாது என்று இல்லை. படங்களின் சுட்டிகள் இருக்கும். அதைச் சொடுக்கினால் தனிப் பக்கத்தில் படங்கள் திறக்கும்)
சிக்னேச்சரில் உள்ள எழுத்துக்கள் வேண்டும். ஆனால் படம் வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு!
Show Signature-ஐ Enableசெய்துவிட்டு Show Images-ஐ மட்டும் Disable செய்துவிட்டால் சிக்னேச்சரில் உள்ள எழுத்துக்கள் மட்டும் தெரியும். படம் சுட்டியாகத் தெரியும்.

என்ன நண்பர்களே! இனி யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லைதானே. இனி தைரியமாக எங்கிருந்து வேண்டுமானாலும் காமலோகம் படிக்கலாம். அதே நேரத்தில் மற்றவர்களும் அவர்களுக்கு பிடித்த படங்கள், அவதார் மற்றும் சிக்னேச்சர் வைத்துக்கொள்ளலாம்.


உங்களுக்கு தேவையானதை நீங்கள் தேர்வுசெய்யும் வசதி இருக்கும் போது அடுத்தவர்கள் எதை வைத்திருந்தால் நமக்கு என்ன நண்பர்களே!

என்ன நான் சொல்லுறது.. சரிதானுங்களே!

நன்றி

அன்புடன்
ரசி கேம்ரென்

இதற்கான விளக்கப் படம்:


Last edited by Rassy_Camren; 18-10-10 at 12:05 AM.
Reply With Quote