View Single Post
  #7  
Old 09-12-15, 04:36 AM
mouni mouni is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி

Awards Showcase

 
Join Date: 05 Jun 2005
Location: டெல்லி - ஃபரீதாபாத்
Posts: 3,260
My Threads  
சென்னை...வடியாத வெள்ளமும் கண்ணீரும் -என் அனுபவம் - மௌனி

தாய் சென்னையை பார்த்து பல நாளாகி விட்டது. திடிரென்று ஆஃபீஸ் விஷயமாக சென்னைக்கு செல்கிறீர்களா என்றி சொன்னவுடன் பாய்ந்து சென்னை வந்தேன். தாய் சென்னையல்லவா!

திங்கள்

லேசான மழை. பரவாயில்லை என்று நினைத்தேன்.

செவ்வாய்
நல்ல மழை. நூற்றாண்டிலேயே இதுதான் கடின மழை என்றார்கள்.

புதன்
தண்ணீர் கணுக்கால் முழுதும் ஓடியது. ப்ரைவேசி கருதி இடத்தை சொல்ல விரும்பவில்லை.

வியாழன்
செம்பரம்பாக்கம் தண்ணீர் திறந்து விட்டார்கள்.

வெள்ளி
படகுகள் வந்து சென்னையே வெனீஸ் போல ஆனது. நண்பர்களை விட்டு , உறவுகளை விட்டு பிரிய மனமில்லை. மொட்டை மாடியில் இருந்தோம். தண்ணீர் வடிந்தது.

மாலை அனைவரும் கிளம்பி அருகே ஒரு மேட்டு பகுதியை அடைந்தோம்.

வடியாத தண்ணீர் மற்றும் கண்ணீர்.

சென்னையை மட்டும் நம்பி வந்த பலரை வாழ வைத்த நகரம் இப்போது மீண்டும் பூஜ்யத்தில் வாழ்க்கையை ஆரம்பித்து உள்ளது.

சென்னை...நீ மீண்டு எழுந்து விஸ்வரூபம் எடுக்க வேண்டும்....எடுப்பாய்! நம்பிக்கைதானே வாழ்க்கை.

மௌனி
Reply With Quote