View Single Post
  #20  
Old 07-03-16, 10:36 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
Join Date: 25 Sep 2012
Posts: 1,926
iCash Credits: 27,536
My Threads  
எனது ஆலோசனை ஒன்றை பணிவோடு தெரிவிக்கிறேன்-
சிரிப்பு பதிவுகளுக்கு ஒரு தொகுப்பு திரி ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது. ஏன் என்றால் என் அடுத்தடுத்த இரு சிரிப்பு பதிவுகள் முன்பே பதிக்கப்பட்ட சிரிப்புகள் என்பதால் பூட்டப்படவேண்டியதாகி விட்டது. ஒவ்வொரு முறையும் ஜாக்கிரதையாக தேடுபொறிமூலம் தேடி பதித்தும் கூட இப்படி ஆகி விட்டது.நல்ல வேலையாக நிர்வாக குழுவினரின் கருணையால் எச்சரிக்கை புள்ளிகளில் இருந்து தப்பித்தாகி விட்டது.
இதை தவிர்க்க இரு வழிமுறைகளை கையாளலாம்.-
1] சிரிப்புகளுக்கு மட்டும் ஒரு தொகுப்புதிரி இருந்தால் , புதியதாக சிரிப்பு பதிக்கும் முன்பாக ஒரு முறை பரிசோதித்துவிட்டு பதிவிட வசதியாக இருக்கும் - ஏன் என்றால் , இருக்கும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டசிரிப்பு திரிகளை படித்து , நினைவில் நிறுத்தி , நாம் ஒரு புதிய சிரிப்பை கண்டுபிடித்தி பதிவிடுதல் நடைமுறையில் சற்று கடினமாக உள்ளது. இதே போல் தொகுப்பு திரி சந்தேகங்களுக்கு உள்ளது அல்லவா, அதைப்போல் இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன்.
என்றாலும் நடைமுறையில் இதை செய்வது கஷ்டம் , நிறைய உழைப்பு தேவைப்படும்.
அதனால் , இன்னொரு எளிய வழியும் தோன்றுகிறது . அது-
2]நிர்வாகிகளில் சிரிப்பு விஷயங்களில் அப்டேடட் ஆக உள்ள ஒருவரை , நிர்வாகிகள் தேர்வு செய்து , சிரிப்பு பதிவுகளின் மேற்ப்பார்வையாளர் ஆக நியமித்தால் போதும். புதிய சிரிப்புகள் பதியுமுன், அவருக்கு தனிமடலில் மொத்த சிரிப்பையோ, சுருக்கத்தையோ அனுப்பி , இந்த சிரிப்பு ஏற்கெனெவே பதிவிட்டதா என்று கேட்டு , அவர் இல்லை என்று தெரிவித்தபின் பதிவிடலாம் ;இது சற்று எளிய , நடைமுறைக்கு உகந்த வழியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
நிர்வாகிகள் இதை அன்போடு ஆராய்ந்து , சாதக பாதகங்களை யோசித்து , முடிவெடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தாங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் எனது ஆதரவு உண்டு என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்,
- தமிழ்பிளஸ்
Reply With Quote