View Single Post
  #38  
Old 10-02-07, 11:53 PM
smithadreamy's Avatar
smithadreamy smithadreamy is offline
**Re Activated cancelled
 
Join Date: 07 Feb 2006
Posts: 0
iCash Credits: 26
My Threads  
Exclamation ஜாக்கிரதை: பாஸ்வேர்ட் திருடர்கள்

சமீபத்தில், ஒரு நவீன முறை பாஸ்வொர்ட் திருட்டுக்கு உள்ளானேன். அதை மற்றவர்களிடம் கூறி உஷார்படுத்த வேண்டும் அல்லவா?

கேளுங்கள். இனி alphanumeric பாஸ்வொர்ட் வைத்து கொள்வது மட்டும் போதாது.

கீ லாக்கர் (keylogger) என்ற ஒரு வகை வைரஸை யாரோ எனக்கு அனுப்பியிருக்கிரார்கள். இது என்ன செய்யுமாம், நான் செல்கின்ற வலைதளங்கள், கீபோர்டில் டைப் செய்வது, எல்லாவற்றயும் பதிவு செய்து, வைரஸ் அனுப்பியவருக்கு அனுப்பிவிடுமாம். ஆக நான், ஏதாவது ஒரு சைட்டில் என் பாஸ்வொர்டை டைப் செய்தால், அந்த பாஸ்வொர்ட் ரெகார்ட் செய்யப்பட்டு, சம்பந்தப்ப்ட்டவருக்கு அனுப்பப்படும்.

அதனால், என்னதான் alphanumeric பாஸ்வொர்ட் வைத்திருந்தாலும், இன்னும் பல வழிகளில் பாஸ்வொர்ட் திருடுகிறார்கள். என் பிரச்சினையை தீர்த்து வைத்தவர் சொன்னது, இரண்டு விஷயம்

1. ஆண்டிவைரஸ் எப்பொழுதும் வைத்திருக்கவேண்டும்
2. யாராவது, எதாவது ப்ரோக்ராமை கொடுத்து, தமாஷாக இருக்கும் பார் என்றால், உடனே அதை சொடக்கிப்பார்க்க கூடாது. எங்கிருந்து வந்தது, யார் அனுப்பியது என்று பார்த்து, நம்பகமாக இருந்தால் மட்டுமே ஓபன் செய்ய வேண்டும்.

இதைப்பற்றி எனக்கு இவ்வளவு தான் தெரியும். விஷயம் தெரிந்தவர்கள், சற்று விவரமாக விளக்கலாம்.