View Single Post
  #33  
Old 06-09-09, 01:12 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,297
iCash Credits: 676,276
My Threads  
Quote:
Originally Posted by kavina View Post
நண்பர்ளுக்கு வணக்கம், வொர்டு பிராசரில் (word) ஆங்கில பிழைகள் கோடிட்டு காட்ட பயன்படுத்துவது spell checker.அதே போல் தமிழுக்கு பிழை சுட்டி/திருத்தி மென்பொருள் உள்ளதா? அப்படி எதாவது பிழை திருத்தி இருந்தால் பிழைகள் வராது. கூகிள் தேடல் மூலம் கீழ்கண்ட சுட்டிகளை பெறமுடிந்தது, http://tdil.mit.gov.in/download/rctools/Annam.htm

பயர்பாக்ஸ் தமிழ் ஸ்பெல் செக்கர் https://addons.mozilla.org/en-US/firefox/addon/8902
கூகிளில் தேடினால் உங்களுக்கு மட்டும் தான் கிடைக்குமா?, மற்றவர்களுக்கு கிடைக்காதா என்ன?..

ஒரு தகவல் கிடைத்தால் அதனை சரி பார்த்து உங்கள் மட்டிற்கு திருப்தி இருந்தால் மட்டும் பதியுங்கள், போகிற போக்கில் பதிவுகள் செய்யாதீர்கள், நீங்களை இதனை பதிந்து பார்த்தீர்களா?. நிச்சயம் இருக்காது.

முதலில் சொன்ன அன்னம் என்ற பிழைதிருத்தி ஜாவா உதவியுடன் இயங்கும் இந்த மென்பொருள் உடன் பாண்ட் எதுவும் வருவதில்லை, என்ன பாண்ட் என்று தேடியதில் TAB வகை பாண்ட் என்று மட்டும் தெரிகிறதே அன்றி சரியான பாண்ட் தெரியவில்லை, மேலும் கிடைத்த TAB வகை பாண்ட் எதுவும் அதனுடன் ஒத்துழைக்கவில்லை. இந்த லட்சனத்தில் எப்படி அதில் தட்டச்சு செய்து பிழை திருத்தி பின்னர் அதனை நம் தளத்திற்கு அல்லது யுனிகோடாக்கி பதிப்பது.

இரண்டாவது பயர்பாக்ஸ் ப்ளக் இன் ஒரளவு தான் வார்த்தை தருகிறது, அநேக வார்த்தைகள் சரியான தொடர்பில் இல்லை. உ.தா இல்லை என்ற சொல்லை தவறாக இள்ளை என்று டைப் செய்தால் (ஒ.வாத்தியார் இப்படித்தான் டைப் செய்வார்) அதற்கு சரியான வார்த்தையாக "சள்ளை", "அள்ளை", "பிள்ளை", "வெள்ளை" என்று காட்டுகிறதே அன்றி இல்லை என்று காட்டவில்லை. அவருக்கு என்பதை தவறாக அவறுக்கு என்று டைப் செய்து அதற்கு சரியான வார்த்தை பார்த்தால் "தவறுக்கு", "அறுக்கும்", "வெறுக்கும்", "செருக்கு", என்றே காட்டுகிறது.

இந்த ப்ளக் இன் வெறும் 250 கேபி அளவினாதே இதில் அதிக அளவு டிக்ஸனரி இல்லாததே காரணம்.

நாம் மிகச்சரியானவற்றையே நாம் பொதுவில் சுட்டி காட்ட வேண்டும் என்பதற்காக இதனை பதிகிறேன்.
__________________
Reply With Quote