View Single Post
  #1  
Old 23-03-20, 12:06 AM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,572
பன்முகத்திறன் கொண்ட நடிகர் விசு அவர்கள் காலமானார்

சென்னையில் டைரக்டர் விசு(74) உடல்நல குறைவு காரணமாக மார்ச் 22, 2020 காலமானார். கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக, சிகிச்சை பெற்று வந்த விசு, இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

விசு தமிழ்த் திரைப்பட டைரக்டர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என பல துறைகளில் முடிசூடியவர் ஆவார். இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் மக்களிடையே பெரும் வரேவற்பு பெற்றது. மேலும் திருமதி ஒரு வெகுமதி, பெண்மணி அவள் கண்மணி, இன்னும் பல, இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் சமூக, குடும்பத் திரைப்படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது நகைச்சுவை இன்னும் பலரை மகிழில்விக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

அவரது ஆத்ம சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
Reply With Quote