View Single Post
  #2  
Old 24-04-22, 02:22 PM
annaisivakumar annaisivakumar is offline
Silver Member (i)
 
Join Date: 07 Nov 2006
Posts: 997
iCash Credits: 8,348
My Threads  
அன்பு நண்பருக்கு வணக்கம். ஒரு அருமையான தியரியை தொடங்கியதற்க்கு வாழ்த்துக்கள்.

புத்தகம் வாசிப்பு என்பது தற்போது உள்ள வாழ்க்கை முறையில் குறைந்து விட்டது. அதுவும் நம்முடைய பிள்ளைகளிடம் முற்றிலும் இல்லாமல் போய் விட்டது.

ஆனால், நாம் சிறுவர்களாக இருந்த போது, புத்தம் வாசிப்பு பெரியவர்களிடமும், சிறியவர்களுடமும் மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக நூலகம் சென்று வாசிக்கும் பழக்கம் அதிகமாக இருந்தது.

என்னுடைய புத்தகம் வாசிக்கும் பழக்கம் தொடங்கியது எழுத்தாளர் திரு. ராஜேஷ்குமாரின் துப்பரியும் கதைகளுடன்.

பின்பு திரு. பட்டுகோட்டை பிரபாகரின், கதைகள், திரு, இந்திரா சொளந்திர ராஜன் கதைகள், தினமலரின் சிறுவர் மலர், வாரமலர், ராணி, குமுதம், ஆனந்த விகடன் என்று சென்றது.

வரலாற்று காவியங்கள், திரு. கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம்...

சுயசரிதைகளாக, தந்தை பெரியார், ஹிட்லர், ஆப்ரகாம் லிங்கன், அக்னி சிறகுகள்...

மற்றும் கண்ணதாசனின் ஒரு புத்தகம் (ஏழு பாகம்).

புத்தகம் படித்து நீண்ட நாள்களாக மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது என பார்த்தால்....பொன்னியின் செல்வனும், ஹிட்லரின் சுயசரிதையும் தான்.
__________________
வணக்கம்,
சிவா
Reply With Quote