View Single Post
  #60  
Old 27-09-13, 02:14 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
6000 அடித்த ராசராசனைப் பாராட்டுவோம்!

நண்பர் ராசராசன் இன்று 6000 பதிவுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். பதிக்கும் அத்தனையும் முத்து முத்தாக இருக்கும். கதைகள் பின்னூட்டம் என்று எல்லாமே கலக்கலாக ஈடுபாட்டுடன் அனுபவித்து எழுதுவார்.

கதைகளை ஆழ்ந்து படித்து அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப் பின்னூட்டமிடுவார். அவருடைய பின்னூட்டம் என் கதைக்கு எப்போது கிடைக்கும் என்று ஆவலுடன் காத்திருப்பேன். நாம் எழுதிய களைப்பு தீரும் வகையில் அருமையாகக் கருத்துகளைப் பதிவு செய்வார்.

அவருடைய கதைகளில் செய்தி இருக்கும், சமூக சிந்தனை இருக்கும்.

பழகுதற்கினிய நண்பர் ராராவின் 6000க்குப் பாராட்டி இன்னும் சாதனைகள் பல படைக்க வாழ்த்துவோம் வாருங்கள் நண்பர்களே, நண்பியரே!

Last edited by KANNAN60; 27-09-13 at 02:54 AM.
Reply With Quote