View Single Post
  #40  
Old 02-03-09, 01:43 AM
sreeram sreeram is offline
User inactive for long time
 
Join Date: 23 Dec 2006
Location: Research Lab
Posts: 20
My Threads  
க், ப், த் இவைகள் நாம் பயன்படுத்தும் சொற்களின் தன்மைக்கேற்பவும் இடம் பொருளிற்கேற்பவும் மாறுபடும்.

இந்தவாரப் பலன்கள் --- இங்கே ப் சேர்க்கவேண்டும். pa உச்சரிப்பு.
வாழைப்பழம். pa
நான் பழம் சாப்பிட்டேன். கவனிக்க இங்கும் பழத்திற்கு pa (pazham) உச்சரிப்புதான் வருகின்றது. ஆனாலும் ’ப்’ வராது. ஏனெனில் ’நான்’ என்பது தன்னிலை. தன்னிலை, முன்னிலை, படர்க்கை இங்கு புணர்ச்சி விதிகள் வாரா.

என் வீட்டிற்கு(க்) காயத்திரி வந்தாள் --- என்பதில் க் சேர்க்கத் தேவையில்லை. ஏனெனில் காயத்திரி என்பது ஒரு பெயர்ச்சொல். மேலும் உச்சரிப்பு gha. எனவே ghaவிற்கு ‘க்’ தேவையில்லை.

ரவி என்பது சரியல்ல. இரவி என்பது சரி
ராஜேந்தர் தவறு. இராசேந்தர். சரி
லகு தவறு இலகு சரி.

பில்லாவைப் பார்த்தேன். இங்கே “ப்” வரவேண்டும்.

தமிழில் bi,ba விற்கும் pi, pa விற்கும் ஒரே எழுத்து வடிவமே. பி, பா. பிற மொழிகளில் இருக்கும் Bi, Ba, gha, ga, ka, kha, da, dha, ta, tha போல் தமிழில் தனித்தனி எழுத்து வடிவங்கள் இல்லை. எனவே இடத்தினை வைத்தே நாம் பயன்படுத்தவேண்டும். ஆழ்ந்த வாசிப்பனுபவம் நம்மை செம்மைப் படுத்தும்.

நம் காமலோகத்தில் நீங்கள் தினமும் ஒரு கதை எழுதிப் பதியுங்கள். தானாகவே இப்பிழைகள் நீங்கும். வாத்தியின் ஆரம்ப கால எழுத்துக்களையும் இன்று அவரின் எழுத்துக்களையும் நீங்கள் ஒப்பிட்டால் அவரின் அபரிமிதமான வளர்ச்சி தென்படும்.

Last edited by sreeram; 02-03-09 at 09:43 AM.
Reply With Quote