View Single Post
  #31  
Old 24-11-15, 02:22 PM
Thiru Raj Thiru Raj is offline
Gold Member (i)
 
Join Date: 28 Dec 2005
Posts: 5,927
iCash Credits: 23,291
My Threads  
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
என்னாலும் பிறமொழிச் சொற்கள் கலக்காமல் தூய தமிழில் எழுத முடியும்.. ஏற்கனவே எழுதியும் உள்ளேன்.. ஆனால் அது கதை படிப்பவர்களுக்கு இன்பத்தைக் கொடுக்கவில்லை என்பதை அறிந்த பிறகு நான் என் நடையை மாற்றிக் கொண்டேன்..
Quote:
Originally Posted by asho View Post
இன்னொரு பெரிய உண்மை. நாம் இன்று பயன்படுத்தும் பல தமிழ் வார்த்தைகள்(நல்ல தமிழ் வார்த்தை என்று நினைப்பவை கூட) உண்மையிலே தமிழ்வார்த்தைகள் இல்லை. பாரசீக, அரபு, உருது, சமஸ்கிருத சொற்கள் கொண்டவையே.
Quote:
Originally Posted by HERMI View Post
உங்கள் ஆதங்கம் புரிகிறது...அதேசமயம் தூய தமிழில் கதை எழுதுவது உங்களுக்கு நன்றாக வருகிறது..ரசனையாகவும் இருக்கிறது..ஆனால் அதை எல்லோரும் முயற்சி செய்தால் சரியாக வருமா என்று தெரியவில்லை..அதனால் நீங்கள் உங்கள் பாணியிலேயே தொடருங்கள். சரியா?
டியர் ஜெகன்,

நான் சுமார் 350 வருடங்களுக்கு மேலாக ஆங்கிலேயர்களிடன் அடிமை பட்டு கிடந்தோம்.

அதற்கு முன்பும் பல நூற்றாண்டுகள் உருது பாரசீக மொழிகளை தாய் மொழியாக இருந்தவர்களிடம் அடிமை பட்டு கிடந்தோம்.

இது ஒரு முக்கியமான காரணம்.

இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு சில வார்த்தைகளுக்கு சரியான தமிழ் வார்த்தைகளே இன்னும் நாம் கண்டு பிடிக்க வில்லை. உதாரணமாக பிரா அல்லது பாடிசு என்பதற்கு நாம் வட்டுடை என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறோம். அது நிச்சயமாக ஒரு சரியான தமிழாக்கம் இல்லை. சரியாக சொல்ல வேண்டும் என்றல் முலை உடை அல்லது முலை தாங்கி என்று வைக்க வேண்டும். அது உச்சரிப்புக்கு சரியாக வருமா என்றால் நிச்சயம் சரியாக வராது. அதையே பிரா என்று ஒரு தமிழ் சொல்லை நாம் வைத்துக் கொண்டால் தப்பென்ன இருக்க முடியும்.

அதற்காக நான் ஆங்கில கலப்பை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமல்ல.

சரியான வார்த்தைகள் இல்லாத போது அதற்கென நாம் ஒரு வார்த்தை கண்டு பிடிக்காமல் பிற மொழிகளில் இருந்த வார்த்தை அப்படியே நாம் தமிழில் எடுத்துக் கொண்டால் என்ன தப்பு. அதைத்தான் ஆங்கில மொழி செய்கிறது.

படிக்காத அந்த கால மக்களே ஒரு சில சமயம் இந்த ஆங்கில வார்த்தைகளை எளிதில் புரிந்து கொள்வதால் அதை எடுத்துக் கொள்வதால் ஒன்றும் ஆகி விடாது என்பது என் கருத்து.

பல நூற்றாண்டுகள் அடிமை பட்டு கிடக்கும் போது அழியாத தமிழ் மொழியை எப்போதும் யாரும் அவ்வளவு எளிதில் அழித்து விட முடியாது. ஆதலால் அந்த கவலை வேண்டாம்.

இந்த திரியை இவ்வளவு காலம் படித்து கருத்து சொல்லாமல் இருந்ததற்கு முதலில் தோழர் ஜெகன் அவர்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

நானும் என்னுடைய பதிப்பில் டியர் என்ற சொல்லை தவிர தமிழிலேயே பதிக்க முயற்சி செய்து வருகிறேன். அதையும் மீறி ஏதாவது பிற மொழி கலப்பு வந்திருக்கலாம்.

தங்களின் இந்த முயற்சி மிகவும் பாராட்ட படக் கூடியது.

இதை போல ஒவ்வொருவரும் முயற்சி செய்யும் பட்சத்தில் நிச்சயம் ஒரு நாள் பிற மொழி கலப்பில்லாத தமிழை நாம் பார்க்க முடியும்.

- ராஜ் -
Reply With Quote