View Single Post
  #23  
Old 14-02-14, 11:40 PM
kaamapootham kaamapootham is offline
User inactive for long time
 
Join Date: 02 Oct 2012
Location: சென்னை
Posts: 116
My Threads  
மிகவும் விவாதிக்க படவேண்டிய மற்றும் வருத்த பட வேண்டிய விஷயம்...
முதலில் இதை விரிவாக விவாதத்துக்கு தந்தமைக்கு நன்றி..

இன்றைய காலகட்டங்களில் தமிழ் இறந்து போய் விட்டது என்று கூட கூறலாம்..

நிறைய தமிழ் வார்த்தைகளை தொலைத்து விட்டு, தமிழ் யாதென்று அறியாமல் தமிழன் என்று சொல்லி கொண்டு திரிகின்றோம்..

" திரை படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தல் வரி சலுகை என்று அறிவித்து தமிழை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..'.......

எங்கே போனது எனது தமிழ் .. எப்படி இறந்து கொண்டு இருக்கின்றது எனது தமிழ்... இன்றைய தின பத்திரிகைகளை வாங்கி பாருங்கள்.. அதிலும் கூட ஆங்கிலத்தை அப்படியே தமிழில் எழுதும் பழக்கம் வந்து விட்டது..

அய்யகோ படிக்கும் போதே என் நெஞ்சமெல்லாம் பதறும்.. இதை தான் என் வருங்காலம் படித்து கொண்டு தமிழ் என்று சொல்லி திரிய போகின்றதா..

இதற்கு ஒரு விடிவு காலம் இல்லையா..

இலக்கணம் தொலைத்து விட்டோம் என்றோ...
இன்று நடை முறை தமிழையும் தொலைத்து கொண்டு இருக்கின்றோம்..

என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம் என்பது போயி..
என்று கேட்கும் எங்கள் தமிழின் ஓசை என்று கேட்கும் நிலை வந்து விடுமோ ...
Reply With Quote