நான் கதை எழுத ஆரம்பிக்கும் முன் 'எப்படி கதை எழுதுவது' என்பது பற்றி சில குறிப்புகள் சேகரித்தேன். அவைகள் உங்களுக்கு உபயோகப் படுமா என்று பாருங்கள்.
உங்களைப் படிக்கப்போகும் அந்த முகம் தெரியாத அந்நியர், உங்களைப் படித்ததால் நேரம் வீணாகிவிட்டதாக வருத்தப்படாத அளவிற்கு எழுதுங்கள். வாசகரின் நேரத்தை நீங்கள் மதிப்பது மிக முக்கியம்!
கதையின் ஒரு பாத்திரத்துடனாவது வாசகர் தன்னைத் தொடர்பு படுத்திக்கொள்ள முடிவதாக இருக்க வேண்டும்.
முடிவிற்கு எவ்வளவு அருகில் முடியுமோ அவ்வளவு அருகில் கதையை ஆரம்பியுங்கள்!
ஒருவரை மட்டுமே மகிழ்விப்பதற்காக எழுதுங்கள். உலகத்திலிருக்கும் அத்தனை பேரையும் திருப்திப் படுத்துகிறேன் பேர்வழி என்று கிளம்பினால் உங்கள் கதைக்கும் விஷக்காய்ச்சலுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது!
நன்றி - Jaganathan K
பெரிய பெரிய வாக்கியங்கள், வார்த்தைகள் வேண்டாம். ‘உமிழ் நீரைத் தொண்டைக் குழியிலிருந்து உருட்டித் திரட்டி உதடுகளின் அருகே கொணர்ந்து நாக்கின் முன் பகுதியால் வெளியேற்றினான்.’ என்று சொல்வதை விட ‘துப்பினான்’ என்பது மேல்.
ஒரு வார்த்தையை ஒரு வாக்கியத்தில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாதீர்கள். அவன், இவன், கை, கால் போன்ற அன்றாட வார்த்தைகள் தவிர; உதாரணமாக, பரிணாமம். ‘அவன் மனத்தின் எண்ணங்கள் பரிணாமம் பெற்று அந்த பரிணமிப்பில்… இத்தியாத்திக்குப் பதிலாக, ‘அவன் மனத்தில் எண்ணங்கள் மாறுதலடைந்து அந்தப் பரிணமிப்பில் பெட்டர். அதைவிட பரிணாமம் போன்ற வார்த்தைகளைத் தவிர்ப்பது மேல்.
அந்தரத்தில் எழுதாதீர்கள். அதாவது, உங்கள் கதை கருந்தட்டான்குடியிலோ, மதராஸ் 78லோ எங்காவது ஓர் இடத்தில் நிகழட்டும். அதற்குக் கால்கள் வேண்டும். ஜியாக்ரபி வேண்டும். மிகச் சுலபம் உங்கள் சொந்த ஊர், சொந்த வீதி…
நிறைய எழுதாதீர்கள். முதல் ட்ராப்ட்டைப் பாதியாகக் குறைத்து, அதே கதையைச் சொல்ல முடியுமா பாருங்கள்.
கடைசியாக, எழுதுவதை நிறுத்தாதீர்கள். சளைக்காதீர்கள். என்றாவது. எல்லாரிடமும்- ஆம், எல்லாரிடமும் ஒரு கதை- நல்ல கதை இருக்கிறது. தமிழ் சினிமா வெற்றிப்பட டைரக்டர்கள் போல இரண்டாவது கதையில்தான் பெரும்பாலும் மாட்டிக் கொள்வீர்கள். அதற்கு முதல் தேவை நிறையப் பார்க்க வேண்டும், நிறையப் படிக்க வேண்டும். குட்லக்.
நன்றி -சுஜாதா.
|