<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
உங்கள் கதையில் சொன்ன அதே வார்த்தைகளை இங்கே சொல்கின்றேன்.. உம்மை வாழ்த்த எனக்கு வயதில்ல்லை ஆகையால் வணங்குகின்றேறேறேன்ன்ன்ன்ன்ன்ன்........
உம்முடைய ஆசை நிறைவேற நவம்பர் மாத சிறந்த கதாசிரியாராக தேர்வு பெற வாழ்த்துகின்றேன்.. |
#22
|
|||
|
|||
போத்தன்ராஜா அவர்களின் சாதனைக்கு என் பாராட்டுக்கள் * 100
|
#23
|
|||
|
|||
இந்த சாதனை முறியடிக்க படுமா? முடியாது முடியாது. முயற்சி வேண்டுமானால் செய்யலாம். வெற்றி அடைய முடியாது. இந்த சாதனை முறியடிக்க படலாம், மீண்டும் ஒரு சாதனையால். ஆனால் அதுவும் இந்த போத்தன் ராஜாவால் மட்டுமே முடியும். அப்படி முயற்சி பண்ணுகிறார் என்றால், மீண்டும் அதற்க்காக வாழ்த்து திரியை துவங்க, இன்னும் ஒரிரு வருடங்கள் ஆகலாம்.
சாத்தியமில்லாத சாதனை. வாழ்த்துகிறேன் நண்பனே. தொடரட்டும் தாங்களின் அட்டகாசம். இந்த ஹபிபின் வாழ்த்துக்கள் அன்புடன் ஹபிப் |
#24
|
||||
|
||||
எல்லாவற்றையும் சேர்த்து ஒரு pdf file வடிவில் வழங்கினால் சிறப்பாக இருக்கும்...!
|
#25
|
||||
|
||||
வாழ்த்துக்கள் போத்தன் ராஜா அவர்களே! நீண்ட கதையை போர் அடிக்காமல் (படிப்போருக்கும், எழுதுவோருக்கும்) கொண்டு செல்வது எவ்வளவு கடினமா விஷயம் என்பதை ஓரளவுக்கு அறிந்தவன் என்ற முறையில் தங்களது முயற்சியை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை!
அதே நேரத்தில், தங்களது கதையைத் தொடர்ந்து வாசித்து பின்னூட்டம் இட்டு உற்சாகமூட்டிய வாசகர் பட்டாளத்தையும் பாராட்டாமல் இருக்க முடியது. இந்த தளத்தில் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தி காட்டிய உமது perseveranceக்காக இந்த வருட Cool Writer பதக்கம் உமக்கே கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..! |
#26
|
||||
|
||||
100 பாகங்கள் தந்த திரு போத்தன் ராஜாவின் உழைப்பை முயற்சியை பாராட்ட வார்த்தைகள் இல்லை...
மேன் மேலும் நீண்ட சிறந்த கதைகளை படைக்க வேண்டுகிறேன்... போத்தன் ராஜாவை வாழ்த்த திரி துவக்கிய அசோவுக்கு நன்றி... சாதனை படைத்த திரு ராஜாவுக்கு 500 இபணங்கள்... |
#27
|
|||
|
|||
நான் உங்கள் கதையை படிக்கவில்லை காரணம் இடையில் என் கண்ணில் இந்த கதை தென்பட்ட போது 50 பாகங்கள் தாண்டி விட்டது. இது முதலில் இருந்து படிக்கவேண்டும் நேரம் கிடைக்கும் போது என நினைத்தேன், அப்புறம் எங்க நேரம் கிடைக்கிறது எப்படியும் ஒரு நாள் படிப்பேன்.
ஐயா ஒரு 10பாகம் எழுதவே எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 100ன்னா நினைக்கவே பயமாக இருக்கிறது. வாழ்த்துகள் நண்பரே என் அன்பளிப்பாக 500 இபணங்களோடு. |
#28
|
|||
|
|||
நன்றி நன்றி நன்றி - போத்தன் ராஜா
காமலோக தலைவரிடமிருந்து நேரடி வாழ்த்து 'எழுந்து நின்று கரவொலி எழுப்ப', Asho ஆரம்பித்துள்ள என்னை வாழ்த்த தனி திரி, நண்பர்களின் அபிரித மான பாராட்டுக்கள், என் நெஞ்சம் நெகிழ்கின்றது. நமது லோகம், திறமையை உடனுக்குடன் கண்டறிந்து தகுந்த கௌரவம் அளித்திருப்பது அதன் நிர்வாக திறமையை காட்டுகின்றது.
சிரம் தாழ்ந்து நன்றி கூறுகின்றேன். இந்த கதையின் காமமில்லா பாகங்களுக்கு 8, 9 பின்னூட்டங்கள் கூட தாண்டாது. மனம் சோர்ந்த போது, சில நண்பர்கள் கொடுத்த உற்சாகத்தில் வளர்ந்தது தான் இந்த கதைத் தொடர். ஆகவே என் வெற்றிக்கு அந்த நண்பர்களின் பங்கு பெருமளவுக்கு உண்டு. வாழ்த்தி, பரிசளித்த அன்பர்கள் யாவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். நம்மிடையே காமத்தின் பால் அளவிடமுடியாத ஈர்ப்பு இருப்பது இயற்கை. அதை நிஜவாழ்வில் முழுமையாய் அனுபவிக்க முடியாத சந்தர்ப்ப சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் பலருக்கு, கற்பனையிலாவது அதை அனுபவிக்க ஒரு வடிகால்தான் காமக்கதைகள். அந்த கற்பனையையும் ஒரு வரம்புக்குள் வைத்து ஒரு நிஜவாழ்வை ஒட்டிய கதையை பின்னி காமத்தை கொடுத்தால் படிக்கும் வாசகர்கள் அந்த பாத்திரத்தோடு ஒன்றி அவர்கள் அனுபவிக்கும் காமத்தை தாங்களும் அனுபவிப்பார்கள் என்ற நோக்கத்தோடு எழுதியதுதான் இந்தக் கதை. ஆனால், இந்த அனுமுறையில் ஒரு சிக்கல், கதை படிக்க பொறுமை வேண்டுமே. காமத்தை பருக வரும் பெரும்பாலான வாசகர்கு அது இருப்பது இல்லையே. கிடைக்கும் நேரத்தில் உச்சத்துக்குப் போக காமரசம் தூக்கலாக வேண்டும். அங்கு கதையோ, 'லாஜிக்கோ' இருக்க அவசியமில்லை. அதுவும் தகாத உறவுக் கதைகளில் சொல்லவே வேண்டியதில்லை. 'இன்ஸ்டன்ட் கிக்' தரும் காம வார்த்தைகளை கொச்சையாய் வாரி இறைத்து, சப்தங்களை கூட்டி காமத்தை விவரிக்கும் கதைகளுக்கு பெரும் வரவேற்பு இருப்பதை அறிந்தேன். என் கதைக்கு அப்படிப்பட்ட வரவேற்பு என்றும் கிடைத்ததில்லை. ஆயினும், என் கதையை சில நண்பர்கள் தொடர்ந்து படித்து, அதன் ஆழத்தையும், தரத்தை உணர்ந்து மிகப் பொருத்தமான விமர்சனங்கள் எழுதி என்னை தூக்கி நிறுத்தினர். நானும் தொடர்ந்து கதையை வளர்த்தேன். 15 வித விதமான பெண் பாத்திரங்களை உருவாக்கி, முதலியாரிடம் உரவாட விட்டு காமத்தை அளவாக கலந்து கதை சொன்னேன். அதில் நமது தமிழ் மொழி வளம், வட்டார வழக்கு சொல் வளம், ஒரு ஜம்பது வருடத்துக்கு முந்தய கால கட்ட பழக்க வழக்கங்கள், வாழ்வின் வசதிகள் யாவையும் வெளிக்கொணர வேண்டும். இதை இலக்காக வைத்து கதையை நகர்த்தினேன். ஒவ்வொரு பெண் பாத்திரப்படைப்பும் ப்ரசவ வேதனைதான். அவர்களுக்கென ஒரு தனித் தன்மை வேண்டும் (உருவம், வயது, குணம்) 'ஸ்டீரியே டைப்' ஆகிவிடக்கூடாது. அவள் ஒரு காமம் தரும் ஜடமா....... இல்லையே, அவளுக்கென்று ஒரு மனம் உள்ளதல்லவா அது சிதை படக்கூடாதல்லவா. அவள் முழு பாத்திரமாய் கதையில் வளம் வரவேண்டும் என்று முழு கவனத்துடன் பாடு பட்டேன். வாசகர்கள் அந்த பாத்திரங்களோடு ஒன்றி, அவளுக்கு ஏதும் தீம்பு வந்து விடக்கூடாதென தவித்து எழுதிய பொழுது அது என் பாத்திரப் படைப்புக்கான வெற்றியாக உணர்ந்தேன். 75 பாகத்தோடு முடிக்க நினைத்த என்னை உசுப்பி விட்டு 100 யை தொட சவால் விட்டு என்னை இயக்கிய 'Reader' இன் பங்கை குறிப்பிட்டே ஆக வேண்டும். அதனால் மற்ற நண்பர்களின் பங்கை குறைத்து கூறியதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். விமர்சனம் எழுதி ஊக்குவித்த ஒவ்வொருவருக்கும் என் வெற்றியில் பங்குள்ளது. உங்கள் யாவருக்கும் நன்றி. இந்த இரண்டரை வருடத்தில், (சில வார இடைவெளி தவிர்த்து) இந்த கதை என் ப்ரத்தியோக நேரங்களை முழுமையாய் ஆக்ரமித்துக் கொண்டது. எனது 'லேப் டாப்' கெஞ்சியிருக்கும் வாய் இருந்தால் நடு நிசிக்கும் மேலும் எனக்கு ஓய்வில்லையா என்று. உங்கள் யாவரைவிடவும் நான்தான் மிக மிக அனுபவித்தேன் இந்த கதையை முதல் ரசிகனாய். ஆகவே பட்ட சிரமங்கள் யாவும் மறைந்து போயின. அதுவும் இன்று இப்படிப்பட்ட கௌரவம் நம் லோகத்தில் கிடைத்ததில் உழைப்புக்கான ஊதியம் கிடைத்த மகிழ்ச்சி. உங்களன்பன் போத்தன் ராஜா |
#29
|
|||
|
|||
நான் காமலோகத்தில் முதலில் பார்த்த நெடுந்தொடர் உங்கள் இந்த தொடர்தான்...(எடுத்த ஒன்றை திறம் பட தொடரும் உங்கள் திறமையை கண்டு வியக்கிறேன் ) வாழ்த்துகள் மற்றும் 100 இ.பணங்கள்
|
#30
|
|||
|
|||
என்னிடம் எவ்வளவோ கதை கருக்கள் இருந்தும், சோம்பேறித்தனத்தால் எழுத முடியவில்லை. ராஜா 100 பாகங்கள் எழுதி இருப்பது என்பது ஒரு மகத்தான சாதனை. அதுவும் எந்த பாகமும் காமத்தில் தொய்வில்லாமல் எழுதி இருப்பது பாராட்டப்பட வேண்டியது. என் பரிசளிப்பு 500 இ−பணம்
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|