<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
மறக்க இயலாத பாடகி சுசிலாவுக்கு வயது 80 நாம் வாழ்த்துவோம்,வாருங்கள் அய்யா அம்மணி
தென்னிந்திய திரை உலகின் மறக்க இயலாத பாடகிகளில் ஒருவரான சுசீலாவுக்கு கடந்த வெள்ளிக் கிழமையன்று 80 வயது அய்யா அம்மணி !
ஞான கோகிலம் என்று பெருமையுடன் அழைக்கபடும் பி.சுசிலா தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர் . தமிழ் ,மலையாளம் ,தெலுங்கு,மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் தலைமுறைகளைக் கடந்தும் நினைவில் நிற்கும் பாடல்களை பாடியவர் இவர். ஏவிஎம் நிறுவனம் மாதச்சம்பளம் கொடுத்து அமர்த்தப்பட்ட மிகவும் அரிதானப் பாடகி இவர் . பாடல் வரிகளின் அர்த்தம் தெரியாவிட்டாலும் பாடலின் முழு உணர்வுகளையும் பாவத்தையும் வெளிக் கொண்டு வந்த மேதை இவர் என்று புகழப்படுகிறார். கேரளத்தில் இன்றும் தாலாட்டுப் பாடலாகத் தாய்மார்களால் பாடப்படும் "பாட்டுப் பாடியுறக்கம் ஞான்" பாடல்தான் இவரது முதல் மலையாளப் பாடல். தென் இந்தியாவில் மிகவும் அதிக பட்ச ரசிகர்களைக் கொண்ட ஒரே பாடகி இவர்தான். "சொன்னது நீதான..." "சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து ..." "நலந்தானா, நலந்தானா..." "நினைக்கத் தெரிந்த மனமே..." "எட்டக்கு மாளிகையில் ..." "தூது சொல்லவொரு தோழி இல்லை என்று...." முதலிய அமரத்துவம் வாய்ந்த பாடல்களைப் பாடிய நம் சுசிலா அம்மா அவர்களை நாமும் வாழ்த்துவோம்,வாருங்கள் அய்யா அம்மணி ! நன்றியுடன்: :" தி இந்து "தமிழ் நாள் இதழ் தேதி 15.11.15 Last edited by Kanchanadasan; 15-11-15 at 04:18 PM. |
#2
|
|||
|
|||
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...
|
#3
|
||||
|
||||
நீடூழி வாழ வேண்டும் அம்மா!
|
#4
|
|||
|
|||
தமிழ் திரைஉலகின் போன தலைமுறை பின்னணி பாடகிகள் முப்பெரும்தேவியர்கலான ஜானகி , வாணி ஜெயராம் , மற்றும் சுசீலா ஆகிய மூவரில் இவருக்கும் இடம் உண்டு.
மனம் கனிந்த வாழ்த்துக்கள் அம்மா-- உங்கள் பாடல்களை இன்னும் பல்லாண்டு காலம் கேட்போம். |
#5
|
|||
|
|||
கான சரஸ்வதி சுசீலா அம்மா அவர்களின் குரலுக்கு அடியேன் அடிமை. அவர் பிறந்த மாநிலத்தில் நானும் பிறந்தேன் என்பதில் எனக்கு அளவில்லா மகிழ்ச்சி
|
#6
|
|||
|
|||
கானக்குயில் சுசீலா அவர்களின் தேன்சிந்தும் குரல்வளத்திற்கு
நான் ரசிகை என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகின்றேன். |
#7
|
|||
|
|||
ஊக்குவிக்கும் பின்னூடங்களை எழுதி மகிழும் அந்தப் பொல்லாத நண்பர்கள் அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா அம்மணி !
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|