<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
காமலோகத்தில் இது என்னுடைய 1000வது பதிப்பு கடக்கிறேன்
காமலோகத்தில் வந்து இது என்னுடைய 1000வது பதிப்பு.....காமலோகத்தில் நான் வந்த நாள் முதலே எனது கருத்துக்களை கதைகளுக்கு எனக்கு பிடித்த தமிழ் எழுத்துக்களுடன் ஆசிரியர்களின் படைப்புகளுக்கு வாழ்த்துக்கள் கூறி இருக்கிறேன்.....இதில் எனக்கு பல நண்பர்கள் நான் செய்யும் பிழைகள் அழகாக எடுத்து கூறி என்னை லோகத்தில் சிறந்தவனாக மெருகேற்ற உதவி செய்தார்கள்....அவர்களுக்கு எனது முதற்கண் வணக்கத்தை இங்கே தெரியப்படுத்த விழைகிறேன்.....
ஒரு காமக்கதை பதிக்க வேண்டும் என்றால் ஒரு ஆசிரியர் அவருக்கு ஏற்ற நேரம் காலம் எல்லாம் சரியாக அமைய வேண்டும்....அதற்கு என்று தனி கவனம் செலுத்தி ஒரு முழுக்கதையை வாசகர்களுக்கு பிடித்தார் போல எழுதுவது மிகவும் கடினமான ஒன்று அப்படி இருந்தும் இங்கே பல ஆசிரியர்கள் தன் சுக துக்கங்கள் மறந்து நமக்காக பா கதைகளை வாரி வழங்கி கொண்டுதான் இருக்கின்றாற்கள்..அவர்களுக்கு தேவை லோகத்தில் ஒன்று மட்டுமே..அது என்னை போன்ற வாசகனின் அந்த அழகான தமிழ் கருத்துகள் தான்...அதை நான் என்றுமே இங்கே அளித்து கொண்டு தான் இருப்பேன் மேலும் எனது கருத்துகளை நான் எனக்கு பிடித்த கதைகளுக்கு நான் என்னால் முடிந்த அளவிற்கு வழங்கி கொண்டே இருப்பேன்.....என்னைப் பற்றி கருத்து கூற வேண்டும் என்றால் இந்த திரியில் கூறுங்க நண்பரே...அது என் மீது ஏதேனும் குற்றச்சாற்று இருந்தாலும் கூறவும்...நான் அதை திருத்திக் கொள்கிறேன்
__________________
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார் பெண்மை போற்றுவோம்...காமத்தை ருசிபோம் |
#2
|
||||
|
||||
லோகத்தில் தற்போது ஆக்டிவாக இருக்கும் பங்களிப்பு உறுப்பினர்களின் கதை எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் கதைகளை படித்து பின்னூட்டம் மட்டுமே எழுதும் பின்னூட்ட வாதிகளின் எண்ணிக்கை குறைவு என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட பின்னூட்டவாதிகளில் தாங்களும் ஒருவர். கதைகளை படித்து அதற்கு தரமான கருத்துக்களை பதிவிடும் தாங்கள் ஆயிரம் பதிவுகளை கடந்தது ஆச்சரியம் இல்லை. உங்களைப் போன்ற பின்னூட்டவாதிகளில் தயவால்தான் எங்களை போன்றவர்கள் கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம்.
கதைகளைப் படித்து பாராட்டி நிறை குறைகளை நாசுக்காக சொல்வது ஒரு ரசனையான விசயம். அதை செய்து வரும் தாங்கள் தொடர்ந்து தங்கள் பங்களிப்பை கொடுத்து எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். விரைவில் தங்கவாசல் அடையவும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#3
|
||||
|
||||
நண்பர் பிரேம்ஜி அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக.. தங்களுடைய விமர்சனங்களை படித்திருக்கிறேன்..
ஓரிரு வரிகளோடு நிறுத்தி விடாமல், கதையை ஆழப் படித்து ஒரு பாரா அளவுக்கு பின்னூட்டங்கள் அளிப்பது சிறப்பு.. தங்களின் பின்னூட்டங்கள் கதை படைப்பாளர்களின் ஆர்வத்தை தூண்டி மேலும் எழுதி வைக்கின்றன.. மற்றவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலான தங்களின் எழுத்துப்பணி மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள் நண்பரே!!
__________________
கதைகளை கதைகளாக மட்டுமே பாவிப்போம்!! |
#4
|
|||
|
|||
நண்பர் பிரேம்ஜி அவர்களுக்கு முதலில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை. தெரிவித்து கொள்கிறேன்.
ஆயிரம் பாதிப்புகள் என்பது. நிச்சயம் ஒரு சிறந்த மயில் கல்.. மென் மேலும் நீங்கள் தலத்தில் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும். விதமாக தங்களது விரிவான பின்னூட்டத்தை அளிக்க ,வேண்டுகிறேன் வாழ்க வளர்க |
#5
|
||||
|
||||
பின்னூட்டம் மட்டுமே போட்டு வந்து 1000 பதிவுகளை எட்டியது சாதனை மட்டுமல்ல பலரை உற்சாகபடுத்திய மேட்டரும் இருக்கு. அதற்கு பாராட்டி விரையில் தங்க வாசலை எட்ட வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#6
|
|||
|
|||
சாதனை படைத்து நண்பர் பிரேம்ஜி அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்! அவருடைய திரிகள் அனைத்தையும் ஒன்று விடாமல் விரும்பி படித்து அவை அனைத்துக்கும் என் பாணியில் பின்னூட்டங்கள் எழுதி மகிழ்ந்தேன் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன் அய்யா அம்மணி vjagan!
Last edited by HERMI; 07-02-23 at 06:18 AM. Reason: change user name |
#7
|
|||
|
|||
வளர்ந்து வரும் கதை ஆசிரியரான நான், உங்கள் சேவை நெடுநாள் தாெடர வாழ்த்துகிறேன்.உங்கள் பின்னூட்டம் மிக முக்கிய பங்கு அளித்துள்ளது என்பது தங்களின் பதிவு எண்ணிக்கையில் தெரிகிறது வாழ்த்துகள்.
|
#8
|
|||
|
|||
ஆயிரம் பின்னூட்டம் என்பது மிகவும் அதிகம் எத்தனை வருடமாக இதை செய்திருப்பீர்கள் என்று நினைக்கவே ஆச்சரியமாக உள்ளது. நண்பருக்கு வாழ்த்துக்கள் இதை படிக்கும் போது நாமும் இதை செய்ய வேண்டும் என்று எனக்கும் ஆவலாக உள்ளது.
கதை எழுதுவது ஒரு கலை என்றால் அதற்கு கருத்துக்கள் போட்டு தவறை திருத்துவது அதைவிட ஒரு பிடி மேல் என்று நான் நினைக்கிறேன் ஏனென்றால் பொறுமையாக படித்து இந்த சாதனையை செய்துள்ளீர்கள் |
#9
|
|||
|
|||
1000 பதிப்பு களுக்கு வாழ்த்துக்கள்
இன்னும் சாதனை புறிவீர்... கதை எழுதுவது எல்லோரால் எப்படி முடியாதோ நீண்ட பதிவுகள் போடுவது கூட எவ்வளவோ கஷ்டம் என்று உணர்கிறேன்.... உங்கள் உழப்பிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் |
#10
|
|||
|
|||
ஆயிரம் பதிப்புகளை கடந்த நமது பிரேம்ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களின் கருத்தால் எத்தனை கதை ஆசிரியர்கள் ஊக்கம் பெற்று கதை படைத்து இருப்பார்கள் அதற்கெல்லாம் உங்களுக்கு ஒரு நன்றி மென் மேலும் இது போல் தொடர்ந்து ஆதரவு அளியுங்கள் வாழ்க காமலோகம் வளர்க காமலோகம்.
|
|
|
|