Quote:
Originally Posted by dreamer
நான் நரம்புக்கோளாறு காரணமாக மிக மெதுவாக டைப் செய்கிறேன். ஒரு பக்கம் எழுதிப் பிழை நீக்கச் சுமார் 4 மணி நேரம் ஆகலாம். அவ்வளவு நேரம் ஆன்-லைனில் இருக்கமுடியாது.
|
ஆன் லைனில் மட்டுமே மட்டுமே டைப்செய்யவேண்டும் என ஏதும் இல்லை நன்பரே.. ஆப் லைனிலும் நீங்கள் தட்டச்ச்ய்விட்டு அதன் பின் போஸ்ட் செய்யலாம் ..
இ-கலப்பை என்ற சாப்ட்வேர் மூலம் ..
பதிவிறக்க கீழே இருக்கும் சுட்டியை அழுத்தவும்
http://thamizha.com/system/files/eka...0b_anjal_0.exe
விளக்கம் இங்கே ..
Quote:
1. கீழ்கண்ட இணையதளத்திலிருந்து eKalappai 2.0b (Anjal) என்ற மென்பொருளை உங்கள் கணினியில் பொருத்துங்கள்.
eKalappai 2.0b (Anjal)
2. அதை பொருத்தியப் பிறகு உங்கள் கணினியில் Start பிறகு Programs பிறகு Tavultesoft Keyman For ThamiZha! பிறகு Keyman-ஐ க்ளிக் செய்யுங்கள். இப்பொழுது eKalappai துவங்கி உங்கள் ஸ்கிரீனின் கீழ்வலது மூலையில் இரு சிறு ஐகான் (icon) ஆகிவிடும்.
3. இப்பொழுது கணினியில் Notepad-ஐ துவக்குங்கள்.
4. கர்ஸரை (Cursor) Notepad-இல் வைத்து Alt-2 ஐ அழுத்துங்கள். இப்பொழுது கீழ்வலது மூலையில் இருக்கும் அந்த சிறு ஐகான் "அ" என்ற தமிழ் எழுத்தைக்காட்டும்.
5. பிறகு Notepad-இல் டைப் செய்யுங்கள். என்ன? தமிழில் எழுத துவங்கி விட்டீர்களா? எவ்வளவு சுலபமாக இல்லை?
6. நீங்கள் எவ்வளவு எழுதுகிறீர்களோ அதை அப்படியே காப்பி செய்து காமலோகத்தில் எங்கு பதிக்க நினைக்கிறீர்களோ அங்கிருக்கும் எழுத்துப் பலகையில் பதியுங்கள்.
7. பிறகு நீங்கள் எங்கு எழுதுகிறீர்களோ அதை பொறுத்து "Submit New Thread", அல்லது "Post Quick Reply" என்ற Button-ஐ அழுத்தி உங்கள் பதிப்பை சமர்ப்பியுங்கள்.
பார்த்தீர்களா? ஏழே வழிகளில் உங்களை தமிழில் எழுத வைத்துவிட்டேன். இப்பொழுது எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? செல்லுங்கள். உங்கள் எண்ணங்களை கதைகளாக கட்டுரைகளாக பதியுங்கள்.
மேலும் விவரங்கள் வேண்டுபவர்களுக்கு:
1. eKalappai-யின் Keyman மென்பொருளை ஆரம்பித்து விட்டு Notepad-இல் நீங்கள் Alt-1-ஐ அழுத்தினால் ஆங்கிலத்தில் எழுதலாம். Alt-2-வை அழுத்தினால் யூனிகோட் (Unicode) முறையில் தமிழ் எழுதலாம். இது தான் நமக்கு தேவை. காரணம் காமலோகத்தில் இப்பொழுது எல்லாமே யூனிகோடே. இருப்பினும் இன்னொன்றையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். Alt-3-ஐ அழுத்தினால் தமிழை அஞ்சல் எழுத்துருவில் எழுதலாம். அதற்கு கணினியில் முரசு அஞ்சல் என்ற இன்னொரு எழுத்துருவு மென்பொருளும் வேண்டும். இது கொஞ்சம் குழப்பமானதால் அப்படியே விட்டுவிடுங்கள். Alt-2 மற்றும் Alt-1-ஐ மட்டும் பயன்படுத்துங்கள்.
|