<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 08-08-21, 08:27 PM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,607
My Threads  
“தங்க மகன்” நீரஜ் சோப்ராவை வாழ்த்துவோம்!!

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் தடகளத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 32வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பைனலில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா 23, பங்கேற்றார். காமன்வெல்த் (2018, ஆசிய விளையாட்டில் (2018 தங்கம் வென்ற இவர், தகுதிச் சுற்றில் அதிகபட்சமாக 86.65 மீ., துாரம் எறிந்து முதலிடம் பிடித்தார். தவிர, கடந்த மார்ச் மாதம் நடந்த இந்திய கிராண்ட் பிரிக்ஸ்-3 தடகளத்தில் அதிகபட்சமாக 88.07 மீ., துாரம் எறிந்த இவர், பைனலில் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பைனலில் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், ஜெர்மனியின் ஜூலியர் வெபர், ஜோகனஸ் வெட்டர் உட்பட 12 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு வீரருக்கும் தலா 3 வாய்ப்பு வழங்கப்பட்டன. முதல் வாய்ப்பில் 87.03 மீ., துாரம் எறிந்த நீரஜ், முதலிடம் பிடித்தார். தொடர்ந்து அசத்திய இவர், 2வது வாய்ப்பில் 87.58 மீ., துாரம் எறிந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். ஆனால் 3வது வாய்ப்பில் இவரால் 76.79 மீ., துாரம் மட்டுமே எறிய முடிந்தது. இவரை அடுத்து, செக்குடியரசின் விடேஸ்லாவ் வெஸ்லி (85.44 மீ.,), ஜெர்மனியின் ஜூலியர் வெபர் (85.30 மீ.,) அதிக துாரம் எறிந்தனர். மூன்று வாய்ப்புகளின் முடிவில் 'டாப்-8' இடம் பிடித்தவர்களுக்கு, மீண்டும் 3 வாய்ப்பு வழங்கப்பட்டன.

நான்காவது, 5வது வாய்ப்புகளை 'பவுல்' செய்த நீரஜ் சோப்ரா, கடைசி வாய்ப்பில் 84.24 மீ., துாரம் எறிந்தார். ஐந்தாவது வாய்ப்பில் செக்குடியரசின் ஜாகூப் வாட்லெச், 86.67 மீ., துாரம் எறிந்தார்.

முதல் தங்கம்:
ஆறு சுற்றுகளின் முடிவில், அதிகபட்சமாக 87.58 மீ., துாரம் எறிந்து முதலிடம் பிடித்த நீரஜ் சோப்ரா, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம், 7வது பதக்கம். தவிர, ஒலிம்பிக் தடகளத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். தவிர இவர், ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு (2008 பீஜிங்) பின் தங்கம் வென்ற இந்தியர் என்ற பெருமை பெற்றார்.
அடுத்த இரு இடங்களை செக்குடியரசின் ஜாகூப் வாட்லெச் (86.67 மீ.,), செக்குடியரசின் விடேஸ்லாவ் வெஸ்லி (85.44 மீ.,) கைப்பற்றினர்.

தங்கம் வென்றது எப்படி

ஈட்டி எறிதல் பைனலில் 12 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு வீரருக்கும் தலா 3 வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் முடிவில் 'டாப்-8' இடம் பிடித்தவர்களுக்கு, கூடுதலாக 3 வாய்ப்பு கிடைத்தது.

நீரஜ் சோப்ரா, முதல் மூன்று வாய்ப்புகளில் 87.03, 87.58, 76.79 மீ., துாரம் எறிந்தார். அடுத்த இரு வாய்ப்புகளை 'பவுல்' செய்து வீணடித்த இவர், கடைசியில் 84.24 மீ., எறிந்தார். முடிவில், அதிகபட்சமாக 87.58 மீ., எறிந்த இவர், முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

வாய்ப்பு 1 2 3 4 5 6

எறிந்த துாரம் (மீ.,) 87.03 87.58 76.79 X X 84.24

பயோ டேட்டா

பெயர்: நீரஜ் சோப்ரா

பிறந்த நாள்: 24-12-1997

வயது: 23

பிறந்த இடம்: பானிபட், ஹரியானா

விளையாட்டு: தடகளம், ஈட்டி எறிதல்

பயிற்சியாளர்: உவே ஹான் (ஜெர்மனி)

சிறந்த செயல்பாடு: 88.07 மீ., (2021)

வென்ற பதக்கம்:

* 2016 - ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் - வெள்ளி

* 2016 - உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் - தங்கம்

* 2016 - தெற்காசிய விளையாட்டு - தங்கம்

* 2017 - ஆசிய சாம்பியன்ஷிப் - தங்கம்

* 2018 - காமன்வெல்த் விளையாட்டு - தங்கம்

* 2018 - ஆசிய விளையாட்டு - தங்கம்

* 2020 - டோக்கியோ ஒலிம்பிக் - தங்கம்

விருது:

* 2018 - அர்ஜுனா



டோக்கியோ 2020 - இந்தியாவின் சிறந்த ஒலிம்பிக்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என, 7 பதக்கம் கிடைத்தன. இது, ஒலிம்பிக் அரங்கில் இந்தியாவுக்கு கிடைத்த அதிகபட்ச பதக்கமானது. இதற்கு முன், லண்டன் ஒலிம்பிக்கில் (2012) 2 வெள்ளி, 4 வெண்கலம் என, 6 பதக்கம் கிடைத்திருந்தது. இதில் விஜய் குமார் (துப்பாக்கி சுடுதல்), சுஷில் குமார் (மல்யுத்தம்) தலா ஒரு வெள்ளி, செய்னா நேவல் (பாட்மின்டன்), மேரி கோம் (குத்துச்சண்டை), ககன் நரங் (துப்பாக்கி சுடுதல்), யோகேஷ்வர் தத் (மல்யுத்தம்) தலா ஒரு வெண்கலம் கைப்பற்றினர்.

35 பதக்கம்

ஒலிம்பிக் அரங்கில் இந்தியாவுக்கு 10 தங்கம், 9 வெள்ளி, 16 வெண்கலம் என, மொத்தம் 35 பதக்கம் கிடைத்துள்ளன. இதில் ஹாக்கியில் மட்டும் 8 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என, 13 பதக்கம் கிடைத்தது. தனிநபரில் அபினவ், நீரஜ் தலா ஒரு தங்கம் வென்றனர்.

இந்தியாவுக்கு 7 பதக்கம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இம்முறை இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கம் வென்றது.

வீரர்/வீராங்கனை வயது போட்டி பதக்கம்

நீரஜ் சோப்ரா 23 ஈட்டி எறிதல் தங்கம்

மீராபாய் சானு 26 பளுதுாக்குதல் வெள்ளி

ரவிக்குமார் 23 மல்யுத்தம் வெள்ளி

சிந்து 26 பாட்மின்டன் வெண்கலம்

லவ்லினா 23 குத்துச்சண்டை வெண்கலம்

பஜ்ரங் புனியா 27 மல்யுத்தம் வெண்கலம்

ஆண்கள் ஹாக்கி வெண்கலம்


இது முதன் முறை

ஒலிம்பிக் தடகளத்தில் 1900ல் இங்கிலாந்தின் நார்மன் பிரிட்சர்ட், 200 மீ., ஓட்டம், 200 மீ., தடை ஓட்டத்தில் (1900, பாரிஸ்) இரண்டு வெள்ளி வென்றார். கோல்கட்டாவில் பிறந்த இவர், இந்தியாவுக்காகத் தான் பங்கேற்றார் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூறுகிறது. ஆனால் உலக தடகள அமைப்பு, நார்மன் இங்கிலாந்துக்காகத் தான் பங்கேற்றார் என தெளிவாக கூறுகிறது.

ஏனெனில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் 1920, ஆன்ட்வெர்ப் (பெல்ஜியம்) போட்டியில் இருந்து தான் ஒலிம்பிக்கில் நமது நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.

இவர் தனது தங்க பதக்கத்தை, சமீபத்தில் மறைந்த “பறக்கும் சீக்கியர்” மில்கா சிங்க் மற்றும் ‘பய்யோலி எக்சுபிரச’ பி. டி உஷா அவர்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்!!

ஒவ்வொரு ஒலிம்பிக் வரும் போது இந்தியாவிற்கு தங்கம் கிடைக்காத, நமது தேசிய கீதம் ஒலிக்காத என்று ஏங்கிய கோடிக்கணக்கான இந்திய மக்களுக்கு 07-08-2021 பொன்நாளாக அமைந்தது!!

எனக்கும் தேசிய கீதத்தை கேட்கும் போதே கண்ணீர் வந்து விட்டது! இந்த மறக்கமுடியாத தருணத்தை தந்த நீரஜ் சோப்ரா விற்கு எனது நன்றிகள்!! இவரது பதக்க வேட்டை வெற்றிநடை போடா எனது வாழ்த்துக்கள்!!


இந்த வருட ஒலிம்பிக் இல் சென்ற அனைத்து வீரர்களும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர், நமது தமிழக வீரர்கள் உட்பட, பல பதக்கம் தவற விட்ட வாய்ப்புகளும் அடங்கும், இது அடுத்த ஒலிம்பிக் இல் பதக்கமாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது!!

மேலும் தங்க மகன் நீரஜ் சோப்ராவின் சாதனை, வரும் காலங்களில் கண்டிப்பாக பல இளம் இந்திய வீரர்களை பதக்கம் ஜெயிக்க ஊக்குவிக்கும்

நன்றி - தினமலர்
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.

Last edited by conan; 10-08-21 at 08:24 PM.
Reply With Quote
  #2  
Old 08-08-21, 09:36 PM
devid devid is offline
User inactive for long time
 
Join Date: 08 Feb 2018
Location: Tamil nadu
Posts: 17
My Threads  
நான் வெற்றி பெற்றதை போல உணர்ந்தேன். அழகிய தருணம். வாழ்த்துக்கள் நீரஜ் சோப்ரா.
Reply With Quote
  #3  
Old 08-08-21, 10:40 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,689
iCash Credits: 66,315
My Threads  
இம்முறை நம் வீரர்கள் / வீராங்கனைகள் அனைவரும் அசத்தி விட்டார்கள். மொத்தம் 7 பதக்கங்கள் என்பது இதுவே முதல் முறை (இதற்கு முன்பு 6 என்பதே உச்சம்). போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும், அவர்களில் பதக்கம் வென்ற மற்றும் இனிமேல் வெல்ல இருக்கும் செல்வங்களுக்கு, குறிப்பாக தங்க மகன் நீரஜ் சோப்ரா அவர்களுக்கு வாழ்த்துகளுடன் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #4  
Old 09-08-21, 01:03 AM
icefire89's Avatar
icefire89 icefire89 is offline
Junior Member (i)
 
Join Date: 24 Sep 2011
Location: Madurai
Posts: 89
iCash Credits: 856
My Threads  
தங்கம் வாங்கி இந்தியாவை பெருமை படுத்திய தங்க மகன் நீரஜ் சோப்ரா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
__________________
படித்ததில் பிடித்த கதைகளுக்கு வாக்களியுங்கள் நண்பர்களே
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் சில வரி பின்னூட்டம் கூட போதுமே....
Reply With Quote
  #5  
Old 09-08-21, 05:35 AM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,699
iCash Credits: 465,911
My Threads  
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு இந்தியா தடகளத்தில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளது மிகவும் வரவேற்கத்தக்க விஷயம். இந்த முறை குறைந்தது பதினைந்து பதக்கங்கள் கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்தேன். அந்த விஷயத்தில் ஏமாற்றமாக இருந்தாலும் மற்றபடி 7 பதக்கங்களை பெற்று தந்த அனைத்து வீரர் வீராங்கனைகளுக்கும் என் வாழ்த்துக்கள்.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote
  #6  
Old 09-08-21, 05:39 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,624
iCash Credits: 374,704
My Threads  
இந்தியர் அனைவரையும் பெருமைப்படுத்திய விளையாட்டு வீரர்கள் நம் நினைவில் என்றும் நிலைப்பவர்கள்!
Reply With Quote
  #7  
Old 09-08-21, 07:21 AM
kaamaroja kaamaroja is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Dec 2011
Location: காமலோகம்
Posts: 1,885
My Threads  
130 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகளில்10 தங்கம் கூட வாங்க முடியவில்லை என்று எனக்கு மிகவும் ஏக்கம்.
இந்த முறை3-5 தங்கமாவது வாங்குவோம் என்று இருந்த போது ஒன்றுக்கு கூட வாய்ப்பில்லை என்று நினைத்திருந்தேன்.
கடைசியில் கோல்ப் அதிதியும், ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜும் தங்கம் வெல்ல வாய்ப்புண்டு என்று படித்தபோது சந்தோஷம் உண்டானது.
ஆனால் காலையில் அதிதி தோற்றதும் மிக்க சோகமானது.
மாலையில் நீரஜ் ஆடத்தைப் பார்க்கையில் முதல் 2 ரௌண்டு முடிவிலேயே வெற்றியின் அறிகுறி தெரிய வேண்டாத தெய்வங்கள் இல்லை.
கடைசியில் நீரஜ் தங்கம் வென்றதும் ஏனோ கண்ணீர் துளிகள்.
வாழ்த்துக்கள் நீரஜ்.

Sent from my SM-M515F using Tapatalk
Reply With Quote
  #8  
Old 09-08-21, 08:02 AM
KADAMBANC's Avatar
KADAMBANC KADAMBANC is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 11 May 2021
Location: தமிழ்நாடு
Posts: 4,712
iCash Credits: 100,010
My Threads  
தங்கம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள்.. தடகளத்தில் மயிரிழையில் பதக்கங்களை தவறவிட்டு, நூற்றாண்டுக்கு மேலாக தடுமாறிக் கொண்டிருந்த இந்தியாவுக்கு தங்கத்தையே வென்று கொடுத்ததற்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவருடைய வெற்றி மேலும் பல தங்க மகன்களை உருவாக்கும் என நம்பலாம்.. பாராட்டுக்கள்!!
Reply With Quote
  #9  
Old 09-08-21, 12:23 PM
sinna vaaththiyaar sinna vaaththiyaar is offline
User inactive for long time
 
Join Date: 11 Dec 2005
Location: சிங்கப்பூர்
Posts: 8
My Threads  
Thumbs up

புது நம்பிக்கையை அவர் வெற்றி கொடுத்துள்ளது....

படிக்கும் போது டாக்டர், எஞ்ஜினியர் என்ற ஆப்ஷன்களை கொடுப்பது போல்..இனிமேல் பெற்றோர்கள் விளையாட்டையும் கொடுப்பார்கள் என நம்புகிறேன்..
Reply With Quote
  #10  
Old 11-08-21, 11:39 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
Join Date: 25 Sep 2012
Posts: 1,926
iCash Credits: 27,515
My Threads  
நான் அதிதி அசோக்கின் கோல்ப் மற்றும் நீரஜ் சோப்ராவின் ஈட்டி எறிதல் இரண்டையும் கவனமாக கவனித்து வந்தேன். அதிதி உண்மையாகவே மயிரிழையில் பதக்கத்தை தவற விட்டார் .
நீரஜ் இரண்டாம் வாய்ப்பிலேயே நல்ல தூரம் வீசி விட்டாலும் மற்றவர்கள் யாரவது தொடரும் வாய்ப்புகளில் இன்னும் அதிகம் வீசி பதக்க கனவை தகர்த்து விடுவார்களோ என எண்ணி தவிப்புடன் இருந்தேன் .
நல்ல வேலையாக அப்படி ஒன்னும் நடக்க வில்லை .
நல்வாழ்த்துக்கள் நீரஜ் .
மௌனி இருந்தால் மகிழ்ந்து இருப்பார் என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை .
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:30 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,