Quote:
Originally Posted by asho
Quote:
Originally Posted by Nimmi98
தளம் மீண்டும் வந்து விட்டது
இந்த முறை எல்லாவிதமான update களும் நல்லபடியாக முடிந்துள்ளது என்று நம்புவோம்
|
இதற்கு தெளிவான பதில் சொல்லவே தாமதம் ஆனது. மேலே குறிப்பிட்டபடி எல்லாம் எந்த புது அப்டேட்ட்களும் இப்போதுள்ள தளத்தில் செய்யப்பட்டவில்லை, புதிதாக தனியாக ஒரு சோதனை முயற்சி இப்போது வெளியே செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது. முன்னர் இங்கே அந்த அப்டேட் சரியாக செயல்படாததால் திரும்ப பழைய தளமே அப்படியே தொடர்கிறது. இரண்டு நாள் தளம் நிறுத்தி வைக்கப்பட்டது தான் விளைவு.
திரும்ப தளம் துவக்கப்பட்ட பின்னர், முன்பு எப்போதையும் விட சேர்ச் போட் எனப்படும் ரெஜிஸ்டர் செய்யப்படாத கெஸ்ட் அக்சஸ் தளத்திலே உறுப்பினர்கள் லாகின் ஆனதை விட 100 மடங்கு இருந்த காரணத்தால் இன்று தளத்தை லாகின் ஆனால் ஒழிய அதாவது உறுப்பினர்கள் மட்டுமே பார்க்கும் படி செட்டிங்க்ஸ் செய்து வைத்துள்ளோம். புதிதாக இந்த AI சேர்ச் போட்கள் சமீபகாலமாக அதிகமாக உள்ளதால் தளம் அதன் இயல்பான வேகத்தை இழக்கிறது, ஒரே நேரத்தில் கன்னாபின்னாவென்று தளத்து பக்கங்களை(அனுமதி இல்லாதவற்றையும்) திறக்க முற்பட்டு பிழைச்செய்தி வருவதாலும், தளத்தில் தலைவாசலில் நிர்வாக அறிவிப்பு பகுதியை திரும்ப திரும்ப அனுகுவதாலும் தளத்து பேண்ட்வித் இழப்பும் ஒரளவு ஏற்படுகிறது. எனவே தற்காலிகமாக தளத்தில் சில வசதிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் வேறு வழிமுறைக்கு மாறுவதற்கான வேலைகளை செய்து வருகிறோம், அதுவரை இதுவே நடைமுறையில் இருக்கும்.
|
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. BOT களின் பிரச்சனை பெரிய தலைவலிதான். இப்போது கூட நிர்வாக அறிவிப்புகள் (100 Viewing) என்று காட்டுகிறது . உண்மையில் 7 ஐ டி க்கள் தான் active உறுப்பினர்களாக லாகின் செய்துள்ளனர். இதுபோக forum software ஆல் கண்டுபிடிக்க முடியாமல் எத்தனை BOT கள் இயங்கிகொண்டுக்கிறதோ தெரியவில்லை. காய்த்த மரம் தான் கல்லடிபடும். தரமான படைப்புகள் இருக்கும் வலைதளம் பாதுகாப்பாக இருக்க இதெல்லாம் கட்டுப்படுத்த வேண்டி உள்ளது.
நீங்கள் இத்தனை பிரச்சனைகளையும் சமாளித்து , அதுபோக நேரம் ஒதுக்கி எங்களுக்கும் பதில் தருவதில் மிக்க மகிழ்ச்சி.
எவ்வளவு காலம் ஆனாலும் பரவாயில்லை . நாங்கள் பொறுத்துக்கொள்கிறோம். மீண்டும் நமது வலைத்தளம் முழு பாதுகாப்புடன், புதுப்பொலிவுடன் வந்தால் அதுவே போதும். உங்களது அயராத
பணிக்கு நன்றிகள்.
.