<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
Quote:
மதுரை பக்கம் போயி பாருங்க... எல்லாரையும் அண்ணேன்னு கூப்பிடுவாங்க திருச்சி பக்கம் போயி பாருங்க... எல்லாரையும் ஆங்ஞான்ன்னு கூப்பிடுவாங்க (டவுன் திருச்சி இல்ல) சரி போனமுறை என்னை பாக்க வந்தப்போ 80 பக்கம் நோட்டு வாங்கி வரசொன்னேனே என்ன ஆச்சி.. மறந்துட்டீங்களா... டீச்சர் என்னை அடிக்கிறாங்க... அடுத்த முறை மறக்காம வாங்கி வந்துடுங்க |
#32
|
|||
|
|||
பில்லாஜி நல்லது செய்கிறீர்கள்...
இதை வரவேற்கும் முதல் ஆள் நானாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இந்த திரியில் நீங்களும்,நண்பர்களும் காட்டும் உற்சாகம்,உழைப்பு,ஆர்வத்திற்கு என் நன்றிகள்... நம் தளத்தின் படைப்புகள் சிறந்தவையாக இருக்க நாமெல்லோரும் முயற்சிப்போம். {தவறில்லாத படைப்புகள்} |
#33
|
||||
|
||||
அருமையான .....பாராட்டப்பட வேண்டிய திரி...
எ-கலப்பையில் தட்டெழுத்து செய்யும்போது அவ்வப்போது சில தவறுகள் நிகழத்தான் செய்யும்... 100 விழுக்காடு சரியாக வரும் என்பதை எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் பல பல பதிப்புக்களிலும், ழ-ள-ல, ற-ர, போன்ற குழப்பங்களைக் காணும்போது, என் மனதில் அடிக்கடி தோன்றும் ஓர் எண்ணம்... பேசும்போது உச்சரிப்பில் கவனம் செலுத்தினால் எழுத்துப் பிழைகள் தானாக மறைந்து விடும். தமிழுக்கு 'ழ' அழகு என்று கவிஞர் அருமையாகப் புனைந்தாலும், எத்தனைத் தமிழர்கள் (நன்கு படித்தவர்கள் உட்பட) தமிழை "தமிள்" என்று சொல்லுகிறார்கள் என்று கவனித்தால் இதன் முக்கியத்துவம் புலப்படும். இதனாலேயோ என்னவோ, சிறந்த தமிழ் திரைப்படப் பாட்டுகள் கூட சேர நாட்டுப் பைங்கிளிகளாலேயே பாடப் படுகின்றனவோ என்ற ஐயம் எழுகிறது. சித்திரமும் கைப்பழக்கம் என்பதுபோல், எழுத்துப் பிழையின்று எழுதுவதும் அவ்வாறே.. எழுதியவுடன் ஒரு முறை பிழை இருக்கிறதா என்று மீண்டும் பார்த்து திருத்துவதில் கவனம் செலுத்தினால் மீதி இருக்கக் கூடிய ஒன்றிரண்டு பிழைகளையும் களையலாம்... தூய தமிழில் எழுதுவது வேறு.. பிழையில்லாமல் எழுதுவது வேறு.....!! |
#34
|
|||
|
|||
Coffeeக்குத் தமிழில் குளம்பி என்று பெயர்.
|
#35
|
|||
|
|||
சரியாக சொன்னீர்கள் நண்பரே... மேலே நான் குறிப்பிட்டது தவறுதான்... இதோ உங்கள் பதிப்பிற்கு ஆதாரம்.... வலையில் இருந்து
கோதுமை உப்புமா; தயிற்சோ றூறுகாய் குளம்பியே கதியெனச் சாப்பாட்டுச் சுருக்கம்; அத்தான் எத்தகை வழியினிக் குறைப்பது? பாதம் அடுப்படி*3 பட்டதும் குறைவு; பார்க்கவே ஒட்டா தொலைத்தொடர்க் காட்சிகள்; அத்தான் எத்தனை நாட்களே நகர்வது? 1. பேழை = cupboard 2 குளம்பி = coffee 3. கழுத்திரு = சிவகங்கை மாவட்டத்தில் ஒரு சாரார் திருமணத்தில் மணமகளுக்கு மணமகன் இடும் கழுத்து அணிகலன். கழுத்திருவும், தாலியும் சேர்ந்தே மணப்பெண்ணை மணவாழ்விற்குள் இட்டுவரும் சடங்கு அமையும். நன்றி வாழ்வு வலைதளம் |
#36
|
|||
|
|||
இது ஒரு அருமையான திரி, நண்பர்களுக்கு உபயோகமான திரியும் கூட. தமிழை சரியாக எழுதவும், பேசவும் இது போல நம் தளத்தில் உள்ள தமிழறிஞர்கள் இங்கு வந்து எங்களுக்கு எல்லாம் பாடம் எடுத்தால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும். சாஜித் இது போல இன்னும் நல்ல உபயோகமான தகவல்கள் இருந்தால் நண்பர்களுடன் இங்கே பகிர்ந்துகொள்ளலாமே?
இந்த நல்ல உபயோகமான திரியை ஆரம்பித்த நண்பர் சாஜித் அவர்களுக்கு 200 இபணம் அன்பளிப்பாக அளிக்கின்றேன். |
#37
|
|||
|
|||
சீனா பேன் அவர்களே..நான் இந்த திரியை நாமெல்லாம் தவறில்லாமல் எழுதணும் என்ற எண்ணத்தில் தான் தொடங்கினேன்.
ஆனால்,நண்பர்களின் உதவியால்,எண்ணத்தால்,தான் இந்த திரி இத்தனை உபயோகமானதாகியுள்ளது. தங்களின் அன்பளிப்புக்கு மிக்க நன்றி... |
#38
|
|||
|
|||
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் இந்த இரண்டில் எது சரியான தமிழ்....? வாழ்த்துகள் என்பதே சரியான தமிழ். ‘க்’ பயன்படுத்தலாகாது. சில ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ் Laptop --- மடிக்கணனி Coffee --- குளம்பி Ice Cream --- பனிக்குழைவு Cycle --- மிதி வண்டி Lorry --- சுமையுந்து இத்திரியில் தமிழில் ஏற்படும் உங்களது ஐயங்களையும் சொற்களையும் கேளுங்கள். என்னால் இயன்றளவு விளக்கம் தர விழைகின்றேன். ஆங்கில வழிக் கல்வி கற்றிருந்தாலும், மின்ணணுவியலில் முதுநிலைப் பொறியியல் பட்டம் பெற்றிருந்தாலும் தமிழ் மீது எனக்குத் தீராக் காதல். |
#39
|
|||
|
|||
Quote:
இதற்கென்று ஏதாவது இலக்கணம் இருந்தால் அதை இங்கு தெரிவிக்கலாமே? அன்புடன் பில்லா |
#40
|
|||
|
|||
க், ப், த் இவைகள் நாம் பயன்படுத்தும் சொற்களின் தன்மைக்கேற்பவும் இடம் பொருளிற்கேற்பவும் மாறுபடும்.
இந்தவாரப் பலன்கள் --- இங்கே ப் சேர்க்கவேண்டும். pa உச்சரிப்பு. வாழைப்பழம். pa நான் பழம் சாப்பிட்டேன். கவனிக்க இங்கும் பழத்திற்கு pa (pazham) உச்சரிப்புதான் வருகின்றது. ஆனாலும் ’ப்’ வராது. ஏனெனில் ’நான்’ என்பது தன்னிலை. தன்னிலை, முன்னிலை, படர்க்கை இங்கு புணர்ச்சி விதிகள் வாரா. என் வீட்டிற்கு(க்) காயத்திரி வந்தாள் --- என்பதில் க் சேர்க்கத் தேவையில்லை. ஏனெனில் காயத்திரி என்பது ஒரு பெயர்ச்சொல். மேலும் உச்சரிப்பு gha. எனவே ghaவிற்கு ‘க்’ தேவையில்லை. ரவி என்பது சரியல்ல. இரவி என்பது சரி ராஜேந்தர் தவறு. இராசேந்தர். சரி லகு தவறு இலகு சரி. பில்லாவைப் பார்த்தேன். இங்கே “ப்” வரவேண்டும். தமிழில் bi,ba விற்கும் pi, pa விற்கும் ஒரே எழுத்து வடிவமே. பி, பா. பிற மொழிகளில் இருக்கும் Bi, Ba, gha, ga, ka, kha, da, dha, ta, tha போல் தமிழில் தனித்தனி எழுத்து வடிவங்கள் இல்லை. எனவே இடத்தினை வைத்தே நாம் பயன்படுத்தவேண்டும். ஆழ்ந்த வாசிப்பனுபவம் நம்மை செம்மைப் படுத்தும். நம் காமலோகத்தில் நீங்கள் தினமும் ஒரு கதை எழுதிப் பதியுங்கள். தானாகவே இப்பிழைகள் நீங்கும். வாத்தியின் ஆரம்ப கால எழுத்துக்களையும் இன்று அவரின் எழுத்துக்களையும் நீங்கள் ஒப்பிட்டால் அவரின் அபரிமிதமான வளர்ச்சி தென்படும். Last edited by sreeram; 02-03-09 at 09:43 AM. |
|
|
|