<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
நான் தமிழில் யுனிகோடில் கணிணியில் எழுத துவங்கிய காலம் முதல் ஈ-கலப்பை தான் பயன்படுத்துகிறேன். அதற்கு முன்னரே இருந்து கழகம், பாமினி பான்ட் அத்துப்படி என்பதால் அதிலேயே பழகிவிட்டேன். அதனால் போனடிக் பாவிக்க வேண்டிய தேவை இல்லை.
இருந்தாலும் குரு சொல்றாரேன்னு NHMஐயும் நிறுவிப் பார்த்தேன். இந்தப் பதிவு NHM பாமினியில் எழுதியது தான். தமிழ் மட்டும் பாவிக்கும் எனக்கு ஈ-கலப்பை இலகுவானது. சின்னச் சின்ன வித்தியாசங்கள் உண்டு. இருந்தாலும் யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவென புதிய ஒரு விடயத்தை அறிமுகப்படுத்தியதற்கு நண்பா் குருவுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும். |
#12
|
|||
|
|||
எனது இந்தத்திரியால் பயன்பெற்ற பெறப்போகும் அனைவருக்கும் எனது நன்றிகள்.
அன்பின் மிம்ஸ்.. நானும் இ கலப்பைதான் முன்னர் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். ஆயினும் இந்த என் எச் எம் ரைட்டரில் கூடுதலான வசதிகளைக் கண்டு இதில் மாறி கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக மாற்றாமல் பயன்படுத்துகிறேன். பொதுவாக தமிழில் தட்டச்சும் போது தண்டை என தட்டச்சினால் முன்னர் இ கலப்பையில் தன்டை என டைப் ஆகும். நாம் வலிய ஷிஃப்டை அழுத்தி தண்டை என தட்டச்ச வேண்டும். ஆனால் என் எச் எம் ரைட்டரில் வண்டு தண்டு செண்டு வேண்டும் என நீங்கள் தட்டச்சும் போது ணகரம் தானாகவே ட என்னும் இணைக்கு ஏற்ப மாறிக்கொள்ளும். குறிப்பாக வாத்தியார் செய்யும் மிக அதிக எழுத்துப்பிழைகள் இந்த டண்ணகரப்பிழைகள் தான். அவர் இந்த மென்பொருளைப் பயன்படுத்தினால் தானாகவே குண்டு முண்டு துண்டு என மாறிக்கொள்ளும். இது நிறையப்பேருக்கு பிழை இல்லாமல் தட்டச்ச உதவும். அதனால் தான் அதை இங்கே அறிமுகப்படுத்தி அனைவருக்கும் பயன் உண்டாகட்டுமே என வழங்கினேன். |
#13
|
||||
|
||||
எனக்கு இகலப்பை மிகவும் பழகி விட்டது. தீடிரென என் எச் எம்க்கு மாற முடியுமானு தெரியல
Quote:
இதில் ஒரு சின்ன சந்தேகம் அனைத்து 'ட்'+உயிரெழுத்துக்கும் முன்னால் மூன்று சுழி ண் தான் வருமா? அல்லது ஏதாவது எழுத்துக்கு இரன்டு சுழி 'ன்' உம் வருமா? இது எனக்கு ரொம்ப நாள் குழுப்பமாக இருக்கிறது.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#14
|
|||
|
|||
Quote:
ஆனால் ஆங்கிலத்தை தமிழில் எழுதும்போது லன்டன் என வரலாம் என்றாலும் லண்டன் என எழுதுவதுதான் தமிழுக்கு நாம் செய்யும் மரியாதை. கொண்டான் குண்டான் சிண்டைப்பிடித்து மண்டையை உடைத்தான். இப்படித்தான் வரும். இந்த மாற்றமுடியாத விதியைத்தான் என் எச் எம் ரைட்டர் அதில் புகுத்தியுள்ளது. நீங்கள் எத்தனை முயன்றாலும் ’’வன்டை’’ என டைப் அடிக்க முடியாது, இதைப் பயன்படுத்துவதிலும் சிரமமில்லை வாத்தியார். இன்ஸ்டால் செய்தபின் ஆல்ட் + 2 தமிழுக்கு என வைத்துக்கொண்டால் அந்த ஒரு கீ மட்டுமே தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் நமக்கு மாற்றிக்கொடுக்கும். முயன்று பாருங்களேன் வாத்தியார். காசா பணமா..? |
#15
|
||||
|
||||
Quote:
போனடிக் முறையில் எழுதும் போது (அதாவது veyndaam என ஆங்கிலத்தில் எழுதும்போது அதைத் தமிழாக மாற்றும் முறையில்) ணகரம் தானாக மாறுகிறது. ஈ-கலப்பை போனடிக்கில் நீங்கள் சொல்வது போல ணகரம் மாறுவதில்லை தான். ஆனாலும் எனக்கு என்னை விட என் விரல்களுக்கு பாமினி விசைப்பலகை அமைப்பு பழகிவிட்டது. உங்கள் விளக்கத்துக்கு நன்றி. |
#16
|
|||
|
|||
மிக நல்ல மென்பொருள். தமிழில் எழுத பல வருடங்களாக நான் இதைத்தான் பயன்படுத்துகிறேன். இதை வின்டோஸ் 7, 8 ல்லும் பயன்படுத்தலாம். தமிழ் மட்டுமல்லாது மேலும் பல இந்திய மொழிகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இதன் சிறப்பு.
|
#17
|
|||
|
|||
எனக்கும் மிகவும் பிடித்த மிகவும் பயனாக்கம் செய்யும் இணைய தளம் அய்யா அம்மணி !மிக்க நன்றி அய்யா அம்மணி !
|
#18
|
|||
|
|||
Quote:
Quote:
"அதை ஏன் பார்த்தாய்..?" இது ஒரு கேள்வி வாக்கியம். இதையே ஒரு ஆணிடம் கேட்பதுபோல் (பெண்ணிடமும் கேட்கலாம்.. ஒரே பொருள்தான் வரும்) மாற்றிப்பார்க்கலாமா..? "அதை ஏண்டா பார்த்தாய்..?" வாக்கியம் இப்படி வரவேண்டுமா அல்லது "அதை ஏன்டா பார்த்தாய்..?" என இப்படி வரவேண்டுமா..? "ஏன்" என்பதில் உள்ள இரண்டு சுழி 'ன்' மூன்று சுழிக்கு மாறினாலும் அதே அர்த்தம்தான் தருமா..? |
#19
|
|||
|
|||
அப்பப்பா! என்ன ஒரு இலகுவான தளம்..நன்றி குரு அவர்களே! தவறில்லாமலும் வேகமாகவும் தமிழ் எழுத உதவுகிறது...ரொம்பவும் நன்றி!!
|
#20
|
|||
|
|||
மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. நான் கடந்த இர்ண்டு நாட்களிலேயே தமிழில் எந்த தவறும் இல்லாமல் தட்டச்சு செய்ய உதவியாக இருக்கிறது.. மிக்க நன்றி
|
|
|
|