<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
1009 நாட் அவுட் - இந்திய பள்ளி மாணவனின் புதிய பாட்டிங் உலக சாதனை.
மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்த பள்ளிகளுக்கு இடையிலான போட்டி ஒன்றில் பதினைந்து வயது பள்ளி மாணவராகிய பிரணவ் தனவதே , ஆட்டமிழக்காமல் 1009 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ஒரு ஏழை ஆட்டோ டிரைவரின் மகனான பிரணவ் ஒரு விக்கெட் கீப்பர் - பாட்ஸ்மன் ஆவார். இவர் இதற்கு முன் எடுத்த அதிகபட்ச ஸ்கோரே என்பது சொச்சம்தான். மேற்சொன்ன போட்டியில் துவக்க ஆடக்கரராக களம் கண்ட பிரணவ் , 327 பந்துகளில் 129 பவுண்டரி மற்றும் 59 சிக்ஸ்செர்களுடன் 1009 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆடமிலக்காமல் இருந்தார்.இவருடைய அணியான கே .சி. காந்தி ஆங்கில பள்ளி எடுத்துள்ள மொத்த ஸ்கோர்- 1465/3. எதிர் அணியான ஆர்யா குருகுல் பள்ளி ஒரு சாதாரண அணி என்பதும்( எதிர் அணியில் முதல் இன்னிங்க்சில் ஆறு டக் , இரண்டாம் இன்னிங்க்சில் எட்டு டக்), போட்டி நடந்த ஆடுகளம் சற்று சிறியது என்பதும் சில விமர்சகர்களால் சுட்டி காட்டப்பட்டாலும் , இது ஒரு அங்கீகரிக்கபட்ட போட்டி என்பதால் உலக சாதனை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக இருந்த உலக சாதனை 117 ஆண்டுகளுக்கு முன் ஆர்தர் காலின்ஸ் என்ற ஆஸ்திரேலியர் (எப்பா !!!! எங்க எடுத்தாலும் ஆஸ்திரேலியா , ஆஸ்திரேலியா) எடுத்திருந்த 628 ரன் நாட் அவுட் என்ற சாதனை , ஒரு இந்திய மாணவ செல்வத்தால் முறியடிக்கப்படுள்ளது. இது நம் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்திதானே?!?!?! வழக்கம் போல இது ஒன்னும் பெரிய சாதனை இல்லை என்று மேலே நான் சொன்ன காரணங்களை கூறி ஒரு கூடும் இந்த சாதனையைஇன் முக்கியத்துவத்தை குறைக்க முயற்சிக்கிறது. நான் அந்த விமர்சனப் புலிகளிடம் கேட்க விரும்புவது இதுதான்--- நாம் எல்லோரும் தெரு கிரிகெட்டொ,பள்ளி கிரிகெட்டொ , கல்லூரி கிரிகெட்டொ கட்டாயம் ஆடி இருப்போம். அதுல நாம் யாராவது இந்த அளவு ஒரு ஸ்கோர் எடுத்து இருக்கிறோமா??? அல்லது வேறு யாராவாது எடுத்ததாக கேள்வி பட்டு இருக்கிறோமா????? நான் கேள்விப்பட்டதில்லை . எனவே தோசையில் ஓட்டையை எண்ணுவதை விட்டுவிட்டு , கிரிக்கெட் உலக சாதனையாளர்கள் வரிசையை அலங்கரிக்க்கபோகும் புது இந்தியரான ப்ரனவை வாழ்த்துவோம். நாம் பாராட்டுகிரோமோ இல்லையோ - பல மூத்த இந்திய வீரர்களும் முன்னாள் வீரர்களும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள் என்பது ஒரு நெஞ்சைதீண்டும் மகிழ்ச்சியான செய்தி. மும்பை கிரிக்கெட் சங்கம் ப்ரனவுக்கு ஐந்தாண்டுகளுக்கு கிரிக்கெட் ஸ்காலர்ஷிப் வழங்க உள்ளது. வாழ்த்துக்கள் பிரணவ்!!!!! நாங்கள் அடுத்த சச்சினை தேடி கொண்டிருக்கிறோம் - உங்களில் அந்த தேடல் முற்றுப்பெருமா?? அல்லது விக்கெட் கீபர் பாட்ஸ்மன் ஆனதால் நீங்க அடுத்த தோனியின் அச்சாரமா??? எதுவா இருந்தாலும் ஓ. கே. வாங்க . சீக்கிரம் சீனியர் கிரிக்கெட், மாநில லெவல் ., மண்டல லெவல். பன்னாட்டு போட்டி என்று முன்னேறி கலக்குங்க!!!! ஆல் தி பெஸ்ட்!!! |
#2
|
|||
|
|||
சாதனை படைத்த அந்தப் பொல்லாத மாணவ மணிக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பலே...பலே...பலே...அட ...அடெ...அடேடே...அட்ரா சக்கை என்றாராம்...அய்யா அம்மணி !
மிகவும் மெனக்கெட்டு அமர்ந்து மிகவும் உழைத்து எழுதி வெளிட்ட அந்த பொல்லாதப் படைப்பாளருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .பலே...பலே...பலே...அட ...அடெ...அடேடே...அட்ரா சக்கை என்றாராம்...அய்யா அம்மணி !பலே...பலே...பலே...அட ...அடெ...அடேடே...அட்ரா சக்கை என்றாராம்...அய்யா அம்மணி !.கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்புக் குறியீடும் பலே...பலே...பலே...அட ...அடெ...அடேடே...அட்ரா சக்கை என்றாராம்...அய்யா அம்மணி! |
#3
|
|||
|
|||
என்னுடைய முதல் திரி- நான் எழுதிய திரிகளில் அதிக நேரம் செலவிட்டு எழுதிய இந்த பதிவை யாரும் கண்டுகொள்ளவில்லையே என்ற வருத்தம் எனக்கு வெகு நாட்களாய் உண்டு.
அந்த வருத்தி போக்கிய நண்பர் வியாகன் அவர்களுக்கு நன்றிகள் உரித்தாகுக. |
#4
|
|||
|
|||
என்னால் இயன்ற வரையில் நண்பர்களின் எல்லாத் திரிகளையும் -அவர்கள் மிகவும் மெனக்கெட்டு அமர்ந்து உழைத்து எழுதிய அந்த அரிதான திரிகளை- படித்து அவைகளுக்கு என்னுடைய பாணியில் அவர்களைப் பாராட்டி வாழ்த்திப் பின்னூட்டம் எழுதி பதிவு செய்வதே எனக்கு வேலை அய்யா அம்மணி !
அவர்களுள் நீங்களும் ஒருவர்என்பதில் நான் பெருமையுடன் சொல்லிக் கொள்கிற்றேன் அய்யா அம்மணி ! வளர்க உங்களின் குலம் அய்யா அம்மணி ! வாழ்க உங்களின் கொற்றம் அய்யா அம்மணி ! |
#5
|
|||
|
|||
அந்த வருங்கால நட்சத்திரத்துக்கு என் வாழ்த்துக்கள். இவரை பற்றி பாராட்டி திரி துவங்கிய நண்பர் தமிழ் +க்கும் என் வாழ்த்துக்கள்
|
#6
|
|||
|
|||
Quote:
தமிழ் இலக்கிய உலகில் தி.க.சி என்று ஒரு விமர்சகர் இருந்தார். அவரும் இப்படித்தான் அனைவரையும் பாராட்டுவார். உங்கள் பின்னூட்ட பாணி அவரை நினைவுபடுத்துகிறது. |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|