<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
அஞ்சலி : பிலிம் நியூஸ் ஆனந்தன் மரணம்
தமிழ் திரை உலகின் முதல் பி. ஆர்.ஒ ஆக பணியாற்றி அந்த துறையை உருவாக்கியவரும், ஒரு நடமாடும் திரையுலக கலைக்களஞ்சியமாகவும் விளங்கிய பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள் தன் தொண்ணூறாவது வயதில் 21.03.2016 அன்று சென்னையில் மரணம் அடைந்தார்.
திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் பாலமாக அமையும் பணியான மக்கள் தொடர்பாளர் என்று அழைக்கப்படும் பி.ஆர்.ஓ பணியை இவர்தான் முதல் முதலாக நாடோடி மன்னன் படத்தில் பணிபுரிந்து துவக்கி வைத்தார். அது துவங்கி சுமார் 900 படங்களில் அப்பணி செய்தார். அபாரமான நினைவு சக்தியும், கிடைத்த விஷயங்களை சரியாக ஆவணப்படுத்தும் திறனும் கொண்டிருந்த அவர் கிட்டத்தட்ட தமிழில் வெளியான அனைத்து படங்களை பற்றியும் தகவல்கள் சேகரித்து வைத்திருந்தார். சில சமயம் ஒரு படத்தின் தயாரிப்பாளரோ , நடிகரோ பல ஆண்டுகள் கழித்து தங்கள் படத்தின் ஏதாவது ஒரு ஸ்டில் வேண்டும் என்றால் அவர்களிடம் கூட இருக்காது- ஆனால் இவரிடம் இருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இவர் ஒரு படத்திலும் நடித்திருக்கிறார். ஆம்! ஊமை விழிகள் படத்தில் கௌரவ வேடத்தில் பத்திரிக்கையாளராகவே ஒரு காட்சியில் நடித்துள்ளார். அன்னாரது ஆத்மா சாந்தி அடையட்டும்! |
#2
|
|||
|
|||
ஓர் அற்புதமான் களஞ்சியத்தை நம்மிடமிருந்து பிரித்து எடுத்துக்கொண்ட அந்தப் பொல்லாத இறைவனை என்னவென்று சொல்ல அய்யா அம்மணி !
இழப்பு யாராலும் ஈடு செய்ய இயலாது அய்யா அம்மணி ! திரை உலகம் ஒரு அறிய நண்பரை இழுந்துவிட்டது அய்யா அம்ம்மணி ! அவரின் குடும்பத்தாருக்கு என் ஆஅழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி ! |
#3
|
|||
|
|||
நடமாடும் சினிமா என்சைக்ளோபீடியா என்று அன்போடு அழைக்கப்பட்ட அய்யா ஆனந்தன் அவர்கள் ஆன்மா இறையருள் அடைய பிராத்தனைகள்...
|
#4
|
|||
|
|||
Quote:
Quote:
ஆயினும் ஓர் ஆச்சரியம்- யாரும் அவர் ஊமை விழிகள் படத்தில் நடித்ததை பற்றி சொல்லவில்லை -குறைந்தபட்சம் நான் பார்த்த வரையில். |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|