<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 28-11-07, 11:22 AM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
ஒற்றுப் பிழைகள் களையச் சொல்லித் தாருங்கள்

தமிழில் ஒற்று பிழைகள் என்னுடன் கூட பிறந்து வளர்ந்தது. அதனால் இப்போது அதனை விரட்ட மிகவும் கஷ்டபடுகிறேன்.
ஒரு சமயம் ஒரு தமிழ் பேராசிரியர் எனக்கு எளிய வழிகள் மூலம் 'ஒற்று பிழையில்லாமல் எழுதுவது எப்படி' என சொல்லி தந்தார். ஆனால் அந்த பேப்பரை தொலைத்து விட்டேன். காமலோக அன்பர்கள் யாராவது ஒற்று பிழைகளை களைவதெப்படி என விதிமுறைகளை சொல்லி தந்தால் நன்றாக இருக்கும்.

(நீங்கள் சொன்னதுபோல் general help பகுதிக்கு மாற்றி விட்டேன்-சூரியத்தமிழன்)

Last edited by mayakrishnan; 08-08-09 at 05:51 PM. Reason: encode change
Reply With Quote
  #2  
Old 03-12-07, 04:17 PM
milkyboy2006 milkyboy2006 is offline
User inactive for long time

Awards Showcase

 
ஒற்று பிழைகள் என்றால் என்ன மாயகிருஸ்ணன்?
மேற்கண்ட உங்களின் பதிவில் ஒரு பிழை கூட இல்லையே?
Reply With Quote
  #3  
Old 03-12-07, 04:26 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
ஒற்று பிழை

Quote:
Originally Posted by milkyboy2006 View Post
ஒற்று பிழைகள் என்றால் என்ன மாயகிருஸ்ணன்?
மேற்கண்ட உங்களின் பதிவில் ஒரு பிழை கூட இல்லையே?
ப், ச் போன்ற ஒற்றெழுத்துக்களை எந்த இரு வார்த்தைகளுக்கு இடையில் பயன்படுத்தலாம், பயன்படுத்த கூடாது என்பதற்கு தமிழ் செய்யுள்கள் (விதிமுறைகள்) உள்ளன. அதை தான் கேட்கிறேன்.

ஆனால் யாரும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.
Reply With Quote
  #4  
Old 03-12-07, 04:33 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,278
iCash Credits: 674,338
My Threads  
இணையத்தில் கிடைத்தது


வல்லின எழுத்துகளில் ட், ற் என்பன சந்தி எழுத்துகளாக வரவே வராது. க், ச், த், ப் என்பவையே சந்தி எழுத்துகளாக வரும். வருமொழியின் முதலெழுத்து க், ச், த், ப் ஆகியவற்றின் வர்க்க எழுத்துகளில் ஒன்றாக வந்தால் வல்லின ஒற்று சில இடங்களில் மிகும்.

வல்லின ஒற்று மிகும் இடங்கள்:

1. அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும், எ என்னும் வினாவெழுத்தின் பின்னும் வல்லினம் மிகும்.

2. அந்த, இந்த, எந்த என்பனவற்றின் பின்னால் வல்லினம் மிகும்.

3. அங்கு, இங்கு, எங்கு, ஆங்கு, ஈங்கு, யாங்கு, ஆண்டு, ஈண்டு, யாண்டு என்னும் இடப்பெயர்களின் பின்னால் வல்லினம் மிகும்.

4. அப்படி, இப்படி, எப்படி என்பனவற்றின் பின்னால் வல்லினம் மிகும்.

5. அதற்கு, இதற்கு, எதற்கு என்பனவற்றின் பின்னால் வல்லினம் மிகும்.

6. எட்டு, பத்து என்பனவற்றின் பின்னால் வல்லினம் மிகும்.

7. வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின்னால் ஒற்று மிகும். வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின்னால் வருமொழி பெயர்ச்சொல்லாக இருந்தாலும் ஒற்று மிகும் (உதாரணம்: பாக்குக் கடை)

8. இரண்டாம் வேற்றுமை விரி அல்லது இரண்டாம் வேற்றுமை தொகாநிலைத் தொடரில், வல்லின ஒற்று மிகும். (உதாரணம்: அவனைக் காப்பாற்று)

9. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைக்குப் பின்னால் வல்லினம் மிகும் (உதாரணம்: நீர்க்குடம். நீரை உடைய குடம் என்று விரியும்)

10. மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைக்குப் பின்னால் வல்லினம் மிகும். (உதாரணம்: வெள்ளித் தட்டு - வெள்ளியினால் செய்யப்பட்ட தட்டு என்று விரியும்.)

11. நான்காம் வேற்றுமை விரி (அல்ல்லது நான்காம் வேற்றுமை தொகாநிலைத் தொடரில்) வல்லின ஒற்று மிகும். (உதாரணம்: தந்தைக்குக் கடமை)

12. நான்காம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அறிணையாயின் வல்லினம் மிகும். (உதாரணம்: வேலிக் கம்பி - வேலிக்குக் கம்பி என்று விரியும்)

13. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் - நிலைமொழி அறிணையாயின் வல்லினம் மிகும். (உதாரணம்: கூலிப்படை - கூலிக்குப் போர்புரியும் படை என்று விரியும்)

14. ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அறிணையாயின் பெரும்பாலும் வல்லினம் மிகும். (உதாரணம்: புலமைச் சிறப்பு - புலமையது சிறப்பு என்று விரியும்)

15. ஏழாம் வேற்றூமை உருபும் பயனும் உடன் தொக்க தொகைக்குப் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: நீர்ப்பாம்பு - நீர்க்கண் வாழும் பாம்பு என்று விரியும்.)

16. நிலைமொழியின் இறுதியில் ய், ர், ழ் என்னும் எழுத்துகள் இருக்க, வருமொழி பெயர்ச்சொல்லாயின் இடையில் வல்லினம் மிகும். (உதாரணம்: நீர்க் கோலம், தாய்ப் பாசம், தமிழ்க் கட்டுரை)

17. பண்புத் தொகையில் வல்லினம் மிகும் (உதாரணம்: பெருமைக் குணம், அருமைத் தம்பி, நகைச்சுவை, வெள்ளைக்குதிரை)

18. இருபெயரொட்டு பண்புத் தொகையில் வல்லினம் மிகும். (உதாரணம்: மழைக்காலம், செவ்வாய்க் கிழமை, சாரைப் பாம்பு)

19. உவமைத் தொகையில் வல்லினம் மிகும். (உதாரணம்: மலர்க்கண் - மலர் போன்ற கண், சர்க்கரைத் தமிழ்)

20. போல என்னும் உவம உருபின் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: பாம்பு போலச் சீறினான்)

21. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வல்லினம் மிகும்.

22. இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: தேடிச் சென்றான், நாடிப் போனான்)

23. அகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: காணக் கூடாது, படிக்கப் பயப்படாதே.)

24. ஆய், போய் என்னும் வினையெச்சங்களின் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: நன்றாய்க் கூறினான், போய்ப் பார்)

25. ஆக, போக என்னும் வினையெச்சங்களின் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: நன்றாகக் கேள், போகக் கூடாது.)

26. செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: கேளாக் கொடு, காணாச் சிரித்தான்.)

27. முன்னர், பின்னர் என்னும் இடைச்சொற்களுக்குப் பின் வல்லினம் மிகும்.

28. சித்திரை முதலான மாதங்களுக்குப் பின் வல்லினம் மிகும்.

29. நிலைமொழி ஈற்றில் உயிர் எழுத்து வரின் வல்லினம் மிகும். ஓரெழுத்து ஒரு மொழிக்கும் இது பொருந்தும். (உதாரணம்: கல்விக் கடல், அறிவுச் சுடர், தீப் பற்றியது, கைப்பிடி)

30. இனி, என என்னும் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகும்.

31. எழுவாய்த் தொடரானாலும் நிலைமொழி ஓரெழுத்து ஒரு மொழியாயின் வருமொழி முன் வல்லினம் பெரும்பாலும் மிகும். (உதாரணம்: தீச்சிறியது, நாக்குழறியது)

32. எழுவாய்த் தொடரில் குறில் நெடிலுக்குப் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: இராப் பகல்)

33. எழுவாய்த் தொடரில் இரு நெடில்களில் பின் வல்லினம் மிகும். (தாராப் பறந்தது, ஆமாத் துரத்தினான்)

34. கடு, விள என்னும் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகும். (கடுச் சிறிது, விளத் தீது)


வல்லின ஒற்று மிகா இடங்கள்:

1. அது, இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

2. எது, யாது என்னும் வினாச் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.

3. அவை, இவை, எவை, அத்தனை, இத்தனை, எத்தனை என்பனவற்றின் பின் வல்லினம் மிகாது.

4. அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு என்பனவற்றின் பின் வல்லினம் மிகாது.

5. அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு என்பனவற்றின் பின் வல்லினம் மிகாது.

6. அன்று, இன்று, என்றூ என்பனவற்றின் பின் வல்லினம் மிகாது.

7. மென்றொடர்க் குற்றியலுகரத்தில் வல்லினம் மிகாது.

8. எண்ணுப் பெயர்களான, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, ஒன்பது ஆகியவற்றின் பின் வல்லினம் மிகாது.

9. ஒவ்வொரு என்பதன் பின் வல்லினம் மிகாது.

10. முதலாம் வேற்றுமை என்னும் எழுவாய் வேற்றுமையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: கூனி கொடுத்தாள், வள்ளி சென்றாள், தாய் காப்பாற்றுவாள்.)

11. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: நீர் குடித்தான்)

12. மூன்றாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: கை தட்டினான்)

13. மூன்றாம் வேற்றுமை விரியிலும் வல்லினம் மிகாது. (உதாரணம்: தந்தையோடு சென்றான்.)

14. சிறு, சிறிய, பெரிய என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.

15. நான்காம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாயின் வல்லினம் மிகாது. (உதாரணம்: தங்கை பெண், கண்ணகி கேள்வன்)

16. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையிலும் உயர்திணையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: தக்கோர் சால்பு)

17. ஐந்தாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது.

18. ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையானால் வல்லினம் மிகாது. (உதாரணம்: காளி கோயில்)

19. ஆறாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது. (உதாரணம்: கண்ணனது கை)

20. ஏழாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: தரை படுத்தான்.)

21. எட்டாம் வேற்றுமை என்னும் விளி வேற்றுமையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: தலைவா கொடும், நாடே தாழாதே.)

22. வினைத்தொகையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: தாழ்குழல், காய்கதிர்)

23. உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: கபிலபரணர், செடிகொடி, வெற்றிலை பாக்கு)

24. வினைமுற்றுத் தொடர்களில் வல்லினம் மிகாது. (உதாரணம்: ஓடின குதிரைகள், போயின பசுக்கள்)

24. படி என்னும் இறுதியுடைய சொல் வினையுடன் சேர்ந்து வரும்போது வல்லினம் மிகாது. (உதாரணம்: வரும்படி சொல், போகும்படி சொல்லாதே.)

25. பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகாது. (உதாரணம்: வந்த கன்று, சென்ற தாய், ஓடிய சிறுவன்)

26. உகர ஈற்று வினையெச்சத்தின்பின் வல்லினம் மிகாது. (உதாரணம்: சென்று கண்டான், தின்று கொழுத்தான்)

27. ஆ என்னும் எழுத்தை இறுதியில் கொண்டுள்ள வினாச்சொல்லுக்குப் பின் வல்லினம் மிகாது. (உதாரணம்: அவனா சொன்னான், அப்படியா சொன்னான்)

28. அடுக்குத் தொடரில் வல்லினம் மிகாது.

29. இரட்டைக் கிளவியில் வல்லினம் மிகாது.

30. நனி, கடி, மா என்னும் உரிச்சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.

31. ஒரு, இரு, அறு, எழு என்னும் விகார எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
__________________

Last edited by xxxGuy; 03-12-07 at 04:49 PM.
Reply With Quote
  #5  
Old 03-12-07, 04:35 PM
rose1604u rose1604u is offline
User inactive for long time

Awards Showcase

 
நண்பர் மாயகிருஸ்ணன் கேட்ட கேள்விக்கு விடை தெரிந்தவர்கள் சீக்கிரம் சொல்லுங்கள்... இந்த குழப்பம் எனக்கும் இருபதால், தங்களின் உதவி தேவையானவர்கள் அனைவருக்கும் பயன்படுமே...


நன்றி asho அவர்களே...

Last edited by rose1604u; 03-12-07 at 04:39 PM.
Reply With Quote
  #7  
Old 03-12-07, 05:14 PM
milkyboy2006 milkyboy2006 is offline
User inactive for long time

Awards Showcase

 
நன்றிகள் பல ஆசோ......

Quote:
Originally Posted by mayakrishnan View Post
ஆனால் யாரும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.
ஆசோ கண்ணில் நீங்கள் கேட்டது பட்டிருக்காது..... இப்ப பாருங்க..... எள்ளுன்னா எண்ணையா இருக்கார்....
ஆசோ பணிகள் லோகத்தில் ஈடு செய்ய முடியாதது.. அவருக்கு நன்றிகள் பல........
Reply With Quote
  #8  
Old 03-12-07, 05:32 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Quote:
Originally Posted by milkyboy2006 View Post
நன்றிகள் பல ஆசோ......ஆசோ கண்ணில் நீங்கள் கேட்டது பட்டிருக்காது..... இப்ப பாருங்க..... எள்ளுன்னா எண்ணையா இருக்கார்....ஆசோ பணிகள் லோகத்தில் ஈடு செய்ய முடியாதது.. அவருக்கு நன்றிகள் பல........
milkyboy சொல்வது உண்மை. பல சமயம் ஆசோவின் திறனையும், அனுசரித்து போகும் திறனையும் கண்டு வியந்திருக்கிறேன். என் வேண்டுகோளை ஏற்று உடனே அதனை நிறைவேற்றிய ஆசோவிற்கு நன்றிகளுடன் நூறு ஐ காசுகள்.
Reply With Quote
  #9  
Old 03-12-07, 05:47 PM
niceguy niceguy is offline
User inactive for long time
 
ஒரு தகவல் கேட்டால் ஒன்பது தகவல்கள் இனாமாக கிடைப்பது நம்

தளத்தில் மட்டும்தான். என்ன ஒரு விளக்கம், கொடுத்தார் பாருங்கள்

அசோ. சூப்பர்.
Reply With Quote
  #10  
Old 03-12-07, 06:35 PM
smartman's Avatar
smartman smartman is offline
Precious Contributor - Inactive
 
அசோவை எள்ளுன்னா எண்ணையா நிற்பாருன்னு சொன்னாக்கூட பொருந்தாது...

அரிசி பத்தி கேட்டா... நெல் விளைச்சல், அறுவடைலே தொடங்கி அரிசியோட வகைகள், அரிசியிலே என்னென்ன வகையான சத்து இருக்குன்னு ஆரம்பிச்சி... அரிசியிலே செய்யுற இட்லி, தோசை, இடியாப்பம், இதர இதர வகைகளின் செய்முறை.. அதை எப்படி சாப்பிடணும்.. எவ்வளவு சாப்பிடணும்னு மொத்தமா சொல்லிடுவாரு... அதுதான் அசோ.

Last edited by smartman; 03-12-07 at 06:37 PM.
Reply With Quote
Reply

Tags
சொல்லி , பிழைகள் , ஒற்று , களைய


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:15 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,