<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
பின்னணி பாடகி பி.சுசிலாவின் சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் .
தமிழ் மற்றும் பல இந்திய மொழிகளில் பின்னணி பாடியுள்ள பின்னணி பாடகி பி.சுசிலாவின் சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவாகி உள்ளது.
அதுமட்டுமல்ல ஆசிய சாதனைகளுக்கான புத்தகத்திலும் பதிவாகி உள்ளது. மேற்கண்ட இரு புத்தக அமைப்பாளர்களும் அவர் 16000 பாடல்களுக்கு மேல் பாடி உள்ளதை உறுதிப்படுத்திய பின் மேற்கண்ட சாதனையை பதிவு செய்துள்ளனர். ஆனால் சுசிலா அவர்களோ அவர்கள் பரிசோதித்தது 1960க்கு பின் உள்ள காலம் தான் என்றும் , ஆனால் தான் 1951 இல் இருந்தே பாடி வருவதாகவும் கூறுகிறார். எனவே உண்மை பாடல்களின் எண்ணிக்கை இன்னும் கூட வாய்ப்பு உள்ளது. அவருடைய சாதனையை வாழ்த்துவோமே!!!. |
#2
|
|||
|
|||
வடக்கில் லதா... தெற்கில் சுசிலா, குயில்கள். என்ன ஒரு இனிமை, தெலுங்கு தாய் மொழி என்று தெரியாதபடி என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு... இவர் பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம். எனக்கு பிடித்தது பல அதில் ஒன்று 'மாலை பொழுதில் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி'. நிசப்தமான இரவில் மென்மையாக வைத்து கேட்டால் மயங்கதவரும் உண்டோ??
|
#3
|
|||
|
|||
சுசீலாவை பற்றி சொல்ல என்ன இருக்கிறது? தமிழ் திரை உலகு கண்ட காண குயில்.. வாழ்த்துக்கள் சுசீலா அம்மா!
அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்வது நமக்கெல்லாம் பெருமை |
#4
|
|||
|
|||
தமிழை தமிழாகவே உச்சரிப்பு பிழை ஏதும் இல்லாமல் பாடும் தெலுங்கினை தாய் மொழியாகக் கொண்ட ஓர் அற்புதமானக் பாடகி இவர் அய்யா அம்மணி ! வெகு நாள் வரை இவர் ஓர் தமிழ் அம்மணி என்றே நினைத்து வந்தேன் அய்யா அம்மணி ! அவர வாழ்க வளமுடன் அய்யா அம்மணி ! அவரின் சாதனைகள் மேலும் தொடர வாழ்த்துக்கள அய்யா அம்மணி !
|
#5
|
||||
|
||||
சாதனை தொடர வாழ்த்துக்கள்
|
#6
|
|||
|
|||
பி சுசீலா அவர்களின் சாதனை கவுரவிக்க பட வேண்டியது.
ஆள்வோர்கள் செய்வார்களா? |
#7
|
||||
|
||||
மனதை மயக்கும் தேன்குரலால் நம்மை வசப்படுத்தும் பாடகி.
|
#8
|
|||
|
|||
Quote:
இந்த திரிக்கு பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி, |
#9
|
||||
|
||||
இத்தனை பாடல் பாடியுள்ளாரா, பெருமூச்சு வருகிறது. பாராட்டுக்கள், மேலும் பல சாதனை செய்ய வாழ்த்துக்கள் கூறுவோம்
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#10
|
|||
|
|||
உண்மையில் இன்னும் அதிகம் என்கிறார் அவர். இப்போ எடுத்த பட்டியலில் 1960 க்கு பின் உள்ள பாடல்கள் மட்டும் இருக்கிறதாம் . ஆனால் அவர் 1951 முதல் பாடி வருகிறாராம்.
|
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|