View Single Post
  #13  
Old 24-04-14, 07:51 PM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
மதிப்பிற்குரிய ஐயா..,

இத்திரியை நான் விவாதத் திரியாக ஆக்க விரும்பவில்லை. இருந்தாலும்..

Quote:
Originally Posted by dreamer View Post
கம்பர், வள்ளுவர் மற்றும் இளங்கோவடிகள் படைப்புகளைப்பற்றி. இவற்றை அவர்களுடைய சமகாலத்து எழுதப்படிக்கத் தெரியாதவரே உதவியின்றி முழுமையாகப் புரிந்துகொள்வார்களா என்பதுதான் எனது வினா.
அது சந்தேகம்தான். ஏனென்றால் கம்பன், இளங்கோவடிகள், திருவள்ளுவர் போன்றோர் இலக்கணக்கட்டுப்பாட்டுடன் கூடிய செய்யுள்களைப்படைத்தவர்கள்.
அவை எழுதப்படிக்க தெரியாதவர்களுக்குப் புரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். கண்டிப்பாக புலவர்களின் பொழிப்புரை தேவைப்பட்டிருக்கும்.
மாறாக ஷேக்ஸ்பியர் நாடகங்களைப் படைத்தவர். இதற்கு புலவர்களின் பொழிப்புரை தேவைப்பட்டிருக்குமா..?

Quote:
Originally Posted by dreamer View Post
'காயாத கானகத்தே' போன்ற பாடல்களைக் கொண்டுவ்ந்து திசை திருப்பாமல்
இங்கு நான் திசைதிருப்பவில்லை ஐயா.. நீங்கள் கொசுறு செய்தியாக...

Quote:
Originally Posted by dreamer View Post
ஷேக்ஸ்பியர் எழுதிய பச்சையான காம வசனங்களை அவர் நாடகங்களுக்கு வந்திருக்கும் மக்கள் விஸிலடித்து வரவேற்றனர்.
இதை நீங்கள் குறிப்பிட்டதாலேயே நானும் அந்தக்காலத்தில் நம் ஊர்களில் நடந்த கூத்துமேடைகளில் முழங்கிய வரிகளை எடுத்துக்காட்டாக காட்டினேன்.

Quote:
Originally Posted by dreamer View Post
பாரதி குறிப்பிட்ட முப்பெரும் இலக்கியப் படைப்பாளிகளுடன் ஷேக்ஸ்பியரை பாபுலாரிடி அளவீட்டை வைத்து ஒப்பிட்டுப் பாருங்கள்..
பாரதி குறிப்பிட்ட புகழ்பெற்ற புலவர்களுடன் ஷேக்ஸ்பியரை ஒப்பிடவே முடியாது.
புலவர்கள் இலக்கணசுத்தத்துடன் கூடிய காப்பியங்கள் இயற்றியவர்கள். ஷேக்ஸ்பியரோ புதினங்களைப் படைத்தவர்.
வெறும் பாப்புலாரிட்டி என்ற அளவுகோலால் இவர்களை ஒருக்காலும் ஒப்பிடமுடியாது.
ஒருவேளை ஷேக்ஸ்பியர் கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற மொழியின் இலக்கணவரம்பிற்குட்பட்ட செய்யுள்களை இயற்றியிருந்தால் அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
Reply With Quote