<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
நடிகர் பாலாஜி காலமானார்
நடிகர் பாலாஜி மரணம்
தமிழ் திரையுலகில் பல்வேறு பரிமாணங்களில் தனக்கென்று ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த நடிகர் பாலாஜி இன்று ( மே மாதம் 2 ஆம் தேதி) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 74. தமிழ் திரையுலகில் கதாநாயகனாக மட்டுமல்லாமல், ஒரு வில்லனாக குணசித்திர நடிகனாக 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆளுமை செலுத்தி வந்தவர் பாலாஜி. சிறந்த தயாரிப்பாளர் நடிகராக மட்டுமல்லால் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் பாலாஜி திகழ்ந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் பல படங்களில் இணைந்து நடித்தவர் பாலாஜி. பலே பாண்டியா, ஆண்டவன் கட்டளை, போலீஸ்காரன் மகள், படித்தல் மட்டும் போதுமா, சகோதரி போன்ற பல படங்கள் அவரது நடிப்புக்கு சிறந்த உதாரணமாக இன்றளவும் திகழ்கிறது. படித்தால் மட்டும் போதுமா படத்தில் நீச்சல் குளத்தில் அவரும் சிவாஜிம் இணைந்து பாடும் பாடலான..பொன்னொன்று கண்டேன்..பூ அங்கு இல்லை...என்கிற கவியரசர் கண்ணதாசனின் பாடல் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்றாகும். அதிலும் குறிப்பாக உன் விழியில் நான் இருந்தேன்...என்கிற வரி அமரத்துவம் வாய்ந்தது. தமிழ் மட்டுமன்றி, ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் திரைப்படங்களை தயாரித்து வெற்றி கண்டவர் பாலாஜி. வேறு மொழிகளில் வெளியாகும் படங்களை மொழி மாற்றம் செய்து தமிழ் ரசிகர்களுக்கு வழங்கியதில் பாலாஜி அவர்களுக்கு தனியிடம் உண்டு. அவரது தயாரிப்பு நிறுவனம் சுஜாதா சினி ஆர்ட்ஸ் மற்றும் சுரேஷ் புரொடக்ஷண்ஸ் ஆகியவை. கமலஹாசன், ரஜினிகாந்த் ஆகிய தமிழ் திரையுலக பிரபலங்களை வைத்து பல படங்களை வெற்றிகரமாக தயாரித்தவர் பாலாஜி. ரஜினியில் பில்லா மற்றும் ஜானி படத்தில் சிறிய வேடங்களில் பாலாஜி நடித்திருந்தாலும் அது பரவலாக பேசப்பட்டது. . கதாநாயகன் வில்லன் ஆகிய இரண்டு பார்த்திரங்களிலுமே அவரது சிறப்பு முத்திரை அவரது மென்மையான உதட்டோர சிரிப்பாகும். இதை தமிழ் திரையிலகின் பல முன்னணி நடிகர்கள் இப்போதும் புகழ்ந்து பேசுவர். சிறுநீரக கோளாரின் காரனமாக அவதிப்பட்டு வந்த அவர் அடிக்கடி இயந்திரத்தின் மூலம் உடலிலுள்ள துர்நீரை வெளியேற்றும் உபாதைக்கு ஆளானார். இதனால் நாளடைவில் அவரது உடல் நலம் குறைந்து வந்தது. மலையாளத்தில் புகழ் பெற்ற நடிகராகத் திகழும் மோகன் லால் இவருடைய மருமகனாவார் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.. Last edited by muthuveeran; 02-05-09 at 10:52 PM. |
#2
|
|||
|
|||
பாலாஜியின் நடிப்பு எதார்த்தமான ஒன்று.
பாலாஜியின் நடிப்பு எதார்த்தமான ஒன்று. அவரின் பொன்னொன்று கண்டேன் பாடலை நினைவிலிருந்த என்னால் அகற்ற முடியவில்லை!...
அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும்.... |
#3
|
|||
|
|||
நண்பரே நீங்கள் சொல்வது போல் அந்த பாட்டு இன்னும் என் மனதில் இருக்கிறது. பழம் பெரும் நடிகரின் ஆத்மா சாந்தியடையை பிரார்த்திக்கிறேன்.
|
#4
|
|||
|
|||
மறக்க முடியாத நடிகர்களில் ஒருவர். அவரின் ஆன்மா அமைதியுற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். செய்தியை அறியத் தந்த முத்துவீரனுக்கு நன்றி...
|
#5
|
|||
|
|||
ஐய்யாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் ப்ரார்த்திக்கிறேன்
|
#6
|
|||
|
|||
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்
|
#7
|
|||
|
|||
நடிகர்.. தயாரிப்பாளர்.. பாலாஜி அவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்..
வாழ்க தமிழ் |
#8
|
|||
|
|||
அவரின் குணசித்திர நடிப்பு மிகவும் பாராட்டக் கூடிய ஒன்று...சுஜாதா புரடெக்ஷன்ஸ் ஓனரான அவர் மிகவும் கூடுதலனா படங்களை நடிகர் திலகத்தை வைத்து மட்டுமே உருவாக்கியுள்ளார் எனலாம்... அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வெண்டுகிறேன்..
|
#9
|
|||
|
|||
பாலாஜி அவர்களின் நடிப்பு மற்றும் தயாரிப்பு துறையில் சிறந்து விளங்கியவர். இவர் டப் பண்ணி தயாரித்து வெளியான பல படங்கள் வெற்றிகரமாக ஓடியது விதி, சட்டம், தீ, ஓசை ஏராளமான வெற்றிப்படங்களை தந்தவர். அவருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
|
#10
|
|||
|
|||
இரங்கல்
நடிகர் மற்றும் தயாரிப்பாளர் திரு கே. பாலாஜி அவர்களது ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
|
Tags |
நடிகர் , பாலாஜி , காலமானார் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|